top of page

எம்மைப் பற்றி

இந்த மெய்நிகர் அருங்காட்சியகம் இலங்கையின் சமய சுதந்திரம் அல்லது நம்பிக்கை தொடர்பான சிக்கலான வரலாறுகள் மற்றும் சமகால கரிசனைகளைக் காப்பகப்படுத்துதல், கற்றல் மற்றும் விமர்சன ரீதியாக பிரதிபலிக்கும், அனைவரையும் உள்வாங்கிய இடமாக கற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் காலனித்துவ காலத்திலிருந்து இன்றுவரையான சமய சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கேள்விகளில் ஈடுபாடு காட்டுவதற்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காட்சி மற்றும் பொருள் கலைப்பொருட்கள், காப்பக ஆவணங்கள் மற்றும் ஒலி-ஒளி சமூக கதைகள் மற்றும் வாய்வழி வரலாறுகள் ஆகியவற்றை ஒன்றாக தொகுத்து வழங்கும் எங்கள் ஊடாடும் கருப்பொருள் சேகரிப்புகளை ஆராய பார்வையாளர்களை அழைக்கிறோம். இந்த அருங்காட்சியகம் இலங்கையின் மத வாழ்க்கை, வரலாறு மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் வளமான அமைப்புகளையும் உணர்வுபூர்வமான விவரங்களையும் படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் மத சுதந்திரம் மற்றும் நல்லிணக்கத்திற்குத் தொடர்ந்தும்  இடையூறு விளைவிக்கும் பதட்டங்கள், வன்முறைகள் மற்றும் நீடித்த நிறுவனக் கட்டுப்பாடுகள் மற்றும் தவறுகள் குறித்து மேலும் கற்றல், பிரதிபலித்தல் மற்றும் தகவலறிந்த உரையாடலை மேகொள்ளல் என்பவற்றை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். அருங்காட்சியகத்தினால் தொடரப்படும் பணிகள் சம்பந்தமாக விரிவான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆய்வுகள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நலனுக்காக அருங்காட்சியகக் களஞ்சியத்தின் மூலம் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சிகள், விஷேட விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் இலங்கையில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றில் அதிக எழுத்தறிவு மற்றும் மரியாதையை மேம்படுத்துவதற்காக எங்கள் பரந்த சமூகங்களை மையமாகக் கொண்ட மின்-கற்றல் தளம் உள்ளிட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பொது நிகழ்ச்சித் திட்டத்தைத் தக்கவைக்க நாங்கள் மேலும் உறுதிபூண்டுள்ளோம். 

இநத்த அருங்காட்சியகம் The Intercultural Innovation Award இன் ஆதரவினால் செயற்படுகிறது

அருங்காட்சியகக் குழு 

பங்களிப்பு நிபுணர்கள்

சமூக பங்களிப்பாளர்கள்

இந்த அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கற்றல் மற்றும் பிரதிபலிப்புக்கான உள்ளடக்கிய மற்றும் பங்கேற்பு இடமாக அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள், வழிகாட்டுதல் மற்றும் சாட்சியங்களுக்காக இலங்கை முழுவதிலும் உள்ள சமூகப் பங்காளிகளுக்கு அருங்காட்சியகக் குழு நன்றி தெரிவிக்கிறது.

காட்பிரே யோகராஜா


பேராசிரியர் ஃபர்ஸானா ஹனிஃபா,

 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர்


டாக்டர் ஜானகி ஜயவர்தன, சிரேஷ்ட விரிவுரையாளர், வரலாற்றுத் துறை, கொழும்பு பல்கலைக்கழகம்.


பேராசிரியர் ஹர்ஷன ரம்புக்வெல்ல - பணிப்பாளர்,

 

முதுகலைப் பட்டதாரி ஆங்கில நிறுவகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட, கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைப் பிரிவின் முன்னாள் பேராசிரியர்.


பேராசிரியர் தமிழ்மாறன், தலைவர், பொது மற்றும் சர்வதேச சட்டத் துறை, சட்ட பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
ஜாவித் யூசுப், இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணி. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்.


பேராசிரியர் ஜி.பி.வி.சோமரத்ன,

 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் நவீன வரலாற்றுப் பேராசிரியர்
பேராசிரியர் நிர்மல் தேவ்சிறி, கொழும்பு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்
டாக்டர் கெஹான் குணதிலக,

 

சட்டத்தரணி, ஆராய்ச்சி பணிப்பாளர் வெரிட்டே ரிசர்ச்

NCEASL

யாமினி ரவீந்திரன் 
மைக் கேப்ரியல் 
அக்ஷினா பலிஹவனா 
ஷாலோமி டேனியல் 
ஷெனால் ஜேசுடியன் 
நவிந்து மெண்டிஸ் 

ஆராய்ச்சி தலைவர் 
ஷாமரா வெத்திமுனி 

அருங்காட்சியக காப்பாளர்

விந்தியா புத்பிட்டிய 

கலை இயக்குனர்கள் 
திலினி பெரேரா 
சந்தேவ் ஹேண்டி 

ஆராய்ச்சி உதவியாளர்கள் 
தினேஷ் ஜெயக்கொடி 
எம் ஜி ரத்னகாந்தன் 
அப்துல் அஸ்முதீன்
ஆதவன் தெய்வேந்திரம்
ஆதித்யா ரமணீதரன்
சகீனா ராசிக்
துவாரகி சுந்தரமூர்த்தி

 

வடிவமைப்பு மற்றும் மேம்பாடு

ஷனில் விஜேசிங்க| Motion Miracles

திசர ஜயசேகர

வீடியோ
அப்துல் ஹாலிக் அஸீஸ்
இமாத் மஜீத்
யாசீன் கான்
 

bottom of page