top of page
  • Instagram
  • Twitter
  • Facebook

அந்தரங்கக் கொள்கை மற்றும் தரவுப் பாதுகாப்பிற்கான ஒப்பந்தம் 

இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் (NCEASL) ஆகிய நாம் இலங்கையின் சட்டங்களுக்கு கீழ் முறையாகக் கூட்டிணைக்கப்பட்டுள்ளதொரு நம்பிக்கை நிதியம் என்பதோடு மும்மொழிகளிலான மெய்நிகர் அருங்காட்சியகத்தினை (கூட்டாக மெய்நிகர் அருங்காட்சியகம் (VIRTUAL MUSEUM) எனப்படும்) ஆக்கிய உரிமையாளருமாய் உள்ளோம். இது இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பிலுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான சமூக மரியாதை குறித்த வரலாற்றுரீதியான விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்கும் இலங்கையிலுள்ள அனைத்து சமுதாயங்களுக்கிடையிலும் சகவாழ்வினை  மேம்படுத்துவதற்கும் மற்றும் எந்தவொரு மதம் அல்லது நம்பிக்கை தொடர்பாகவும் இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ள முக்கியமான விடயங்களை முன்னிலைப்படுத்திக் காட்டுவதற்குமான (இதனகத்துப்பின்னர் சில சமயங்களில் கூட்டாக “சேவைகள்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள வலைத்தளமொன்றாகும்.

 

எங்களுடைய வலைத்தளங்களைப் பார்வையிடுபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களின் அந்தரங்கத்தின் முக்கியத்துவத்தினை அங்கீகரித்து எங்களுடைய வலைத்தளத்தை அணுகுவதன் அல்லது எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவதன் விளைவாகச் சேகரிக்கப்படுகின்ற தனிப்பட்டத் தகவல்கள் உள்ளடங்கலாக நாம் எவ்வாறு தகவல்களை சேர்க்கின்றோம்இ பயன்படுத்துகின்றோம்இ செயற்படுத்துகின்றோம்இ களஞ்சியப்படுத்தி வைக்கின்றோம் மற்றும் வெளிப்படுத்துகின்றோம் என்பதனை அறியப்படுத்தும் பொருட்டு அந்தரங்கத்திற்கான இக் கொள்கை மற்றும் தரவுப் பாதுகாப்புக் கொள்கையினை ஏற்றுக் கொண்டுள்ளோம். 

 

எங்களுடைய சேவைகள்; சேவைகளை நீங்கள் (பயனர்) பயன்படுத்துவதனூடாக நீங்கள் எங்களுடைய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளீர்கள் மற்றும் அந்தரங்கத்திற்கான இக்கொள்கை மற்றும் தரவுப் பாதுகாப்புக் கொள்கை என்பதை வாசித்து விளங்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதனை நிச்சயப்படுத்துமாறு தேவைப்படுத்தப்படுவீர்கள். 

 

இங்கே விவரிக்கப்பட்டுள்ளனவற்றைத் தவிர்ந்த உங்களைத் தனிப்பட்டரீதியில் அடையாளங்காணத்தகு தகவல்களை நாங்கள் பகிர மாட்டோம்.  

  1. நாங்கள் சேகரிக்கின்ற தகவல்களின் வகைகள்

  2. நாங்கள் எவ்வாறு உங்களுடையத் தகவலைச் சேகரிக்கின்றோம்

  3. நாங்கள் எவ்வாறு மற்றும் எதற்காக உங்களுடையத் தகவலைப் பயன்படுத்துகின்றோம்

  4. உங்களுடையத் தகவலை ஏனைய நிறுவனங்கள் / அமைப்புக்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்

  5. பயனரின் கட்டுப்பாடுஇ உரிமைகள் மற்றும் தெரிவுகள்

  6. செயற்படுத்துவதற்கான பாதுகாப்பு மற்றும் சட்ட அடிப்படை

  7. இவ் அந்தரங்கக் கொள்கைக்கான மாற்றங்கள்

  8. கருத்துக்கள் மற்றும் வினாக்கள் 

1.  சேகரிக்கப்படுகின்றத் தகவல்களின் வகைகள்

நாங்கள் எங்களுடைய பயனர்களிடமிருந்து சேகரிக்கக்கூடிய அனைத்து வகையானத் தனிப்பட்ட மற்றும் ஏனைய தொடர்புடையத் தரவுகள் கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன: 

  • அடையாளத்திற்கானத் தரவு- தனிநபருடைய முதற் பெயர்இ குடும்பப் பெயர் மற்றும் கடைசிப் பெயர்இ பயனர்பெயர் அல்லது அதனையொத்த அடையாளங்காட்டி பதவிப்பெயர் மற்றும் படிமத் தரவு (IMAGE DATA).  

  • தொடர்பிற்கானத் தரவு- நிரந்தர முகவரி தொடர்பிற்கான முகவரி மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம்.

  • சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தரவு- எங்களிடமிருந்து மற்றும் எங்களுடன் தொடர்புற்றுள்ள மூன்றாந் திறத்தவர்களிடமிருந்து சந்தைப்படுத்தல் மற்றும் ஏனையத் தொடர்பாடல்களை குறுந்தகவல் அரட்டை(CHAT) பதிவு அல்லது அதனையொத்த செயற்பாட்டினூடாகப் பெற்றுக் கொள்வதற்கான பயனர்களின் விருப்பத் தெரிவு.

  • நடத்தைசார் தரவு- இயங்கலை செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு பயனர்களின் நடத்தை மற்றும் அக்கறைகள் தொடர்பாக ஊகிக்கப்பட்ட அல்லது எண்ணப்பட்டத் தகவல்கள். இது சேகரிக்கப்பட்டு பிரிவுகளாகக் குழுக்களாக்கப்படும். 

  • தொழிநுட்பத் தரவு- பயனர் இவ்வலைத்தளத்தினை அணுகுவதற்கு அல்லது எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவதற்கு பயன்படுத்துகின்ற சாதனங்களின் இணைய நெறிமுறை முகவரி (IP ADDRESS) உள்நுழைகின்றத் தரவு உலாவியின் (BROWSER) வகை மற்றும் பதிப்புஇ நேர வலயத்தின் அமைப்பு மற்றும் இடம் உலாவியினை மின்னேற்றம் செய்யும் வகைகள் மற்றும் பதிப்புக்கள் செயற்பாட்டு முறைமை மற்றும் தளம் மற்றும்; ஏனைய தகவல்கள். 

  • திரட்டப்பட்டத் தரவுகள்- அத்துடன் நாங்கள் புள்ளிவிபரத் தரவுகள் அல்லது சனத்தொகைசார் தரவுகள் போன்ற “திரட்டப்பட்டத் தரவுகளை” ஏதேனும் நோக்கத்திற்காகச் சேகரிக்க பயன்படுத்த மற்றும் பகிர முடியும். திரட்டப்பட்டத் தரவுகள் பயனர்களின் தனிப்பட்டத் தரவிலிருந்து பெற்றுக் கொள்ளப்படலாம் ஆனால் அவைத் திரட்டப்பட்ட வடிவத்தினை அடைந்த பின்னர் இக் கொள்கையின் நோக்கங்களுக்கமையத் தனிப்பட்டத் தரவுகளைக் கொண்டிருக்காது ஏனெனில் அத்தரவு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனரின் அடையாளத்தை வெளிப்படுத்தாது. எவ்வாறெனினும் திரட்டப்பட்டத் தரவானது பயனர்களின் தனிப்பட்டத்தரவுடன் இணைக்கப்படுகின்ற அல்லது தொடர்புபடுகின்றபோது அது பயனரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடையாளப்படுத்தும் என்ற கரிசனையினால் நாம் அவ்விணைந்தத் தரவினை தனிப்பட்டத் தரவொன்றாகவே கருதுவோம் என்பதுடன் இவ் அந்தரங்கக் கொள்கைக்கு அமையவே அத்தரவு பயன்படுத்தப்படும். 


NCEASL ஆனது வேண்டுமென்ற எண்ணத்துடன் அல்லது அறிவுடன் பயனர்கள் பற்றிய எந்தவொரு “விசேட வகையான தனிப்பட்டத் தரவுகளையும்” (இத்தரவுகள் பயனர்களின் வகுப்பு அல்லது இனம் மத அல்லது சித்தாந்த நம்பிக்கைகள் பாலியல் வாழ்க்கை பாலியல் நோக்குநிலை அரசியல் அபிப்பிராயங்கள் தொழிற்சங்கங்களின் அங்கத்துவம் பயனர்களின் சுகாதார, மரபணு மற்றும் உயிரியல் தரவுகளை உள்ளடக்கும்) சேகரிக்காது. 

 

எவ்வாறெனினும் நீங்கள் அத்தகைய ஏதேனும் தரவுகளை எங்களுடைய சேவையிலுள்ள ஏதேனும் பகிரங்க அரங்குகளில் பதிவிடுவீர்களாயின் மேலே குறிப்பிடப்பட்டதனைப் போன்று அத்தரவுகளை ஏனையோரும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்பதனைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் அத்தகையத் தரவுகளை அவ்வாறு ஏனைய பயனர்களுக்கு அல்லது இச்செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்ற பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக செய்திருக்கும்போது அத்தரவுகளைப் பேணுவது தொடர்பாக எமக்கு எவ்விதக் கடப்பாடும் இல்லை. 

மேலும் நீங்கள்; உங்களுடைய (அல்லது ஏனையோருடைய) படங்களை எங்களுடைய சேவையில் பதிவேற்றம் செய்வீர்களாயின் அத்தகைய படங்கள் அவற்றிலிலுள்ள பொருட்களின் குறிப்பிட்ட சில பண்புகளைப் பரிந்துரைக்கக்கூடிய உட்கிடையாகச் சொல்லக்கூடிய அல்லது வெளிப்படுத்தக்கூடிய சில கூறுகளை அல்லது படங்களைக் கொண்டிருக்கலாம். 
 

எங்களுடைய தளங்கள் அல்லது செயலிகளிலுள்ள (APPLICATIONS) பகிரங்க அரங்கொன்றிலுள்ள அத்தகைய தனிப்பட்டத் தகவலை நீக்குவதற்கான கோரிக்கையொன்றினை விடுக்க வேண்டுமாயின்இ தயவுசெய்து ……………………... என்ற இணைப்பிலுள்ள வாடிக்கையாளர் ஆதரவு நிலையத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள். 
 
மேலும்இ குறித்து கொள்ள வேண்டிய விசேடமான சில சந்தர்ப்பங்கள் உள்ளன: 

  • நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துகின்றபோது பொது மக்களுக்கு அல்லது வேறுபட்ட மூன்றாந் திறத்தவர்களுக்கு கிடைக்கக்கூடியதாகச் செய்த உங்களுடைய தரவுகள் துஷ்பிரயோகப்படுத்தப்படின் அது தொடர்பாக NCEASL எவ்வித பொறுப்பினையும் ஏற்காது.

  • புலமைச் சொத்துக்கான கோரிக்கை பற்றிய அறிவித்தல்கள்: நீங்கள் புலமைச் சொத்துக் கோரிக்கையொன்று தொடர்பாக எங்களுக்கு அறிவிக்கின்றபோது உங்களுடைய கோரிக்கையிலுள்ள தகவல்கள் உடன்பாட்டின்மைக்கான ஏனைய திறத்தவர்களுடன் அல்லது எங்களுடைய தற்துணிபின்பேரிலும் சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுவதன்பேரிலும் மூன்றாந் திறத்தவர்களுடன் பகிரப்படலாம். 

  • முன்னாள் பயனர்கள்: நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவதனை நிறுத்திவிட்டால்இ நாங்கள் உங்களுடையத் தரவுகளை குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்காக அதாவது நீங்கள் மீண்டும் எங்களுடைய தளத்தினை அல்லது செயலிகளைப் பார்வையிடுகின்றபோது பயன்படுத்துவதற்காக அதேபோல அத்தகைய வேறு பாதுகாப்பு பொறிமுறைகளுக்காகப் பயன்படுத்துவோம். 

2.  நாங்கள் எவ்வாறு உங்களுடையத் தகவல்களைச் சேகரிக்கின்றோம் 

பிரிவு 1 இல் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள தகவல்களின் வகைகளை நாம் சேகரிக்கின்றோம் என்பதுடன் நீங்கள் எங்களது தளத்திற்கு அல்லது செயலிகளுக்கு வருகைதருகின்றபோது நீங்கள் பகிரங்க அரங்குகளில் அல்லது அரட்டைகளில் எவற்றையேனும் பதிவிடுகின்றபோது நீங்கள் எங்களது சேவைகளைப் பயன்படுத்துகின்றபோதுஇ நீங்கள் எங்களுக்கு உதவிக்கானக் கோரிக்கைகள் புலமைச் சொத்திற்கான கோரிக்கைகள் அல்லது வேறு கோரிக்கைகள் முறைப்பாடுகள் அல்லது விசாரணைகளை அனுப்புகின்றபோது போட்டிகளில் அல்லது ஊக்குவிப்புக்களில் கலந்துகொள்கின்றபோது அல்லது ஒப்பந்த அல்லது சட்ட காரணங்களுக்காக நாங்கள் உங்களிடம் தகவல்களைக் கேட்கின்றபோதும் நாம் உங்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கின்றோம். 

 

நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துகின்றபோது நாம் தன்னியக்கமாகவே இவற்றுள் சில தகவல்களைப் பதிவு செய்யலாம். 
 

நீங்கள் எங்களுடைய தளங்கள் மற்றும் செயலிகளைப் பார்வையிடுகின்றபோது அல்லது மூன்றாந் திறத்தவர்களின் தளங்களில் எங்களுடைய செயலிகளைப் பயன்படுத்துகின்றபோது உள்ளடங்கலாக குக்கீஸ் மற்றும் வேறு தொழிநுட்பங்கள் (வலைத்தளக் குறிகை(WEB BEACONS) மற்றும் படத்துணுக்கு குறிச்சொற்கள் (PIXEL TAGS)) போன்ற தொழிநுட்பங்களினூடாக நாம் தகவல்களை சேகரிக்கின்றோம். 

 

நாங்கள் வேறுபட்ட மூன்றாந் திறத்தவர்களால் செயற்படுத்தப்படுகின்ற விளம்பர மற்றும்ஃ அல்லது தொடர்புள்ள வலைப்பின்னல்களில் பங்குபற்றுகின்றோம். அத்தகைய மூன்றாந் திறத்தவர்கள் எங்களுடைய சேவைக்கு இணையத் திரக்கினை (INTERNET TRAFFIC) ஆற்றுப்படுத்துகின்ற செயற்பாட்டினைச் செய்வதற்காக நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பார்வையிடுவது தொடர்பான குறிப்பிட்ட சில அடையாளப்படுத்தாதத் தகவல்களை சேகரிக்கலாம் மற்றும் பயன்படுத்தலாம். எவ்வாறெனினும்இ அத்தகைய மூன்றாந் திறத்தவர்களுக்கு உங்களைப் பற்றிய தனிப்பட்டத் தகவல்கள் எதனையும் அறிந்துகொள்ள முடியாது எவ்வாறெனினும் இத்தகைய நிறுவனங்கள் உங்களுடைய IP முகவரியினைச் சேகரிக்க முடியும். இத்தகைய நிறுவனங்கள் நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பார்வையிடுகின்றமை தொடர்பான அடையாளப்படுத்த முடியாதத் தகவல்களை சேரித்துக்கொள்வதற்காக குக்கீஸ்இ படத்துணுக்குகள் மற்றும் வேறு தொழிநுட்பங்களினை அமைத்துக் கொள்ளலாம் மற்றும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதுடன் அத்தகையத் தரவினை ஒன்றுதிரட்டலாம் பகுப்பாய்வு செய்யலாம் மற்றும் அடையாளப்படுத்த முடியாததாக்கலாம். 

 

மூன்றாந் திறத்தவரின் தளத்தில் (உதாரணமாக எங்களுடைய செயலிகளினூடாக) நீங்கள் எங்களுக்கு தகவல்களை வழங்குகின்றபோது உங்களால் வழங்கப்படுகின்றத் தகவலை மூன்றாந் திறத்தவரின் தளம் தனியாக சேகரிக்க முடியுமென்பதனை நினைவிற் கொள்ளுங்கள். நாங்கள் சேகரிக்கின்ற தகவல்களானவை அந்தரங்கத்திற்கான இக்கொள்கையினால் ஆளுகை செய்யப்படும் என்பதுடன் மூன்றாந் திறத்தவரின் தளத்தினால் சேகரிக்கப்படுகின்ற தகவல்களானவை மூன்றாந் திறத்தவரின் அந்தரங்கம் தொடர்பான நடைமுறைகளுக்கு உட்பட்டவை ஆகும். நீங்கள் மூன்றாந் திறத்தவரின் தளத்தில் செய்துள்ள அந்தரங்கம் தொடர்பான தெரிவுகள் எங்களுடைய செயலிகளினூடாக நாங்கள் நேரடியாக சேகரித்த விடயங்கள் தொடர்பில் ஏற்புடையதாகாது. 

3.  நாங்கள் எவ்வாறு மற்றும் எதற்காக உங்களுடையத் தகவலைப் பயன்படுத்துகின்றோம். 

உங்களுடையத் தகவல்களுக்கான தரவுக் கட்டுப்பாட்டாளராக நாங்கள் இருப்போம். நாங்கள் (தரவுக் கட்டுப்பாட்டாளர் என்ற ரீதியில்) உங்களுடையத் தகவல்களை கீழ்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவோம்.
 

  • நீங்கள் கோரியுள்ள ஏதேனும் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்குஇ ஏதேனும் கட்டணங்கள் இருப்பின் அவற்றை செயன்முறைப்படுத்த உங்களுடைய பரிமாற்றங்கள் மற்றும் சேவையுடன் தொடர்புடைய அறிவித்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல்கள் அல்லது ஏனையத் தொடர்பாடல்களை அனுப்புவதற்குஇ உங்களுடைய விருப்பத்தெரிவுகளின் அடிப்படையில் உங்களுக்கென வடிவமைக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்கு. 

  • எங்களுடனான உங்களுடையப் பரிமாற்றங்கள் குறித்து உங்களுடன் தொடர்பாடல் செய்வதற்கு மற்றும் எங்களுடைய தளங்கள் மற்றும் செயலிகளிலுள்ள அம்சங்கள் அல்லது எங்களுடைய கொள்கைகளில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் தொடர்பானத் தகவல்களை உங்களுக்கு அனுப்புவதற்கு. 

    • எங்களுடைய தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் தொடர்பானத் தகவல்களை உங்களுக்கு அனுப்புவதற்கு.

    • எங்களுடைய தளங்கள் மற்றும் செயலிகள் தொடர்பான தனிப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் அனுபவங்களை வழங்குவதற்கு.

    • எங்களுடைய தளங்கள் மற்றும் செயலிகள் மற்றும் மூன்றாந் திறத்தவர்களின் தளங்கள் மற்றும் செயலிகளில் உங்களுடைய செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு விளம்பரங்களை வழங்குவதற்கு. 

    • ஆய்வுகள் போட்டிகள் அல்லது ஊக்குவிப்புக்கள் என்பனவற்றை நிர்வகிப்பதற்கு 

  • எங்களுடைய தயாரிப்புக்கள்இ சேவைகள் மற்றும் செயற்படுத்தல்களை மேம்படுத்துவதற்கு அல்லது முன்னேற்றுவதற்கு. 

  • எங்களுடைய கொள்கைகளை (எங்களுடைய சேவை நியதிகள் உள்ளடங்கலாக) மீறுகின்ற அல்லது சட்ட அமுலாக்க கோரிக்கைகள் உள்ளடங்கலாக சட்டமுரணானதாகவுள்ள செயற்பாடுகளை கண்டறிவதற்குஇ விசாரணை செய்வதற்கு மற்றும் தடுப்பதற்கு. 

  • எங்களுடைய சேவைகளின் பாதுகாப்பினை மேம்படுத்திக் கொள்ளும்பொருட்டு எங்களுடைய சேவைகளில் இடம்பெறுகின்ற செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு. 

  • எங்களுடைய சேவைகளை விருத்தி செய்துக் கொள்வதற்கு மதிப்பிடுவதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு. 

  • உங்களுடைய விசாரணைகள் அல்லது கரிசனைகளுக்கு பதிலளிப்பதற்கு.
     

உங்களுடைய தரவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்குஇ உங்களுக்கு துல்லியமானத் தகவல்களைக் காண்பிப்பதற்கு உங்களுடைய அனுபவங்களைத் தனிப்பயனாக்குவதற்கு (தொடர்பாடலுக்கான விருப்பத்தெரிவுகள் அம்சங்கள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம்) எங்களுடைய பாதுகாப்பு அம்சங்களை சாத்தியமாக்குவதற்கு மற்றும் அவற்றிற்கு ஆதரவளிப்பதற்குஇ தீங்கான செயற்பாடுகளைக் கண்டறிவதற்கு எமக்கு உதவி செய்வதற்கு சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களைச் செய்வதற்கு மற்றும் அவற்றின் செயற்படுதிறனைப் பின்தொடர்வதற்கு மற்றும் எங்களுடைய சேவைகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் குக்கீஸ்களைப் பயன்படுத்துகின்றோம்.  

 

இங்கு சொல்லப்பட்டுள்ள மற்றும் எங்களுடைய சேவை நியதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட சந்தரப்;பங்களைத் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ள உங்களுடைய தனிப்பட்டத் தகவல்கள் அல்லது கணக்குடன் தொடர்புடைய வேறு தகவல்களை உங்களின் அனுமதியின்றி மூன்றாந் திறத்தவர்களுக்கு வெளியிட மாட்டோம்.  

 

எவ்வாறெனினும் கீழ்வரும் சந்தர்ப்பங்களில் NCEASL ஆனது உங்களுடைய தனிப்பட்டத் தகவல்கள் அல்லது கணக்குடன் தொடர்புடைய வேறு தகவல்களை வெளிப்படுத்தலாம் என்பதனை நீங்கள் விளங்கிக் கொண்டுள்ளீர்கள்: 
 

  • பிரயோகமாகின்ற சட்டத்தின்கீழ் அல்லது எங்கள்மீது பாரப்படுத்தப்பட்டுள்ள சட்ட செயன்முறையுடன் இணங்குவதற்கு அத்தகைய வெளிப்படுத்துகை அவசியமானது என நாங்கள் நல்லெண்ணத்துடன் நம்புகின்றபோது;

  • எங்களுடைய உரிமைகள் அல்லது அக்கறைகள்இ தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள்இ மற்றும்/அல்லது அத்தகைய தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளின் ஏனைய பயனர்களைப் பாதுகாக்கும்பொருட்டு அல்லது காத்துக்கொள்ளும்பொருட்டு;

  • சந்தேகத்திற்குரிய சட்டமுரணான அல்லது தவறான செயற்பாடு குறித்து சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு அறிக்கையிடும்பொருட்டு அல்லது அவர்களின் விசாரணைகளுக்கு உதவும்பொருட்டு அல்லது நபரொருவர் ஆபத்திலுள்ளார் என நாம் நம்புகின்ற ஒரு சந்தர்ப்பம் குறித்து அறிக்கையிடும்பொருட்டு;

  • அம்சங்கள் அல்லது செயற்பாடுகள் தொடர்பாக எங்களுக்கு உதவுவதற்காகஇ உங்களுiடைய சேவைகளுக்கான கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யஇ புதிய உள்ளடக்கங்களை வழங்க அல்லது எங்களுடைய தயாரிப்புக்கள் மற்றும்/அல்லது சேவைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள சேவை வழங்குனர்களுக்கு (மோசடிக்கெதிரான செயற்பாடுகள் சேகரிப்புக்கள் பதிவு  வாடிக்கையாளர் உதவி மின்னஞ்சல் அனுப்புதல் வயதினைச் சரிபார்த்தல் போன்றன). இத்தகைய மூன்றாந் திறத்தவர்களுடனான எங்களுடைய ஒப்பந்தங்கள் அவர்கள் உங்களது தனிப்பட்டத் தகவல்களை அவர்கள் வழங்குகின்ற தயாரிப்புக்கள் அல்லது சேவைகளுடன் தொடர்புறாத பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதனைத் தடுக்கின்றது;

  • நீங்கள் கோரியுள்ள சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்காக எங்களுடைய தயாரிப்புக்கள் அல்லது சேவைகள் தொடர்பானத் தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்காக (உதாரணமாக நிகழ்ச்சிகள் அல்லது அம்சங்கள்;) அல்லது  உங்களுடையத் தகவல்களை வழங்க வேண்டுமென்று நீங்கள் எங்களிடம் வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ள நபர்களுக்கு அனுப்புவதற்காக (அல்லது குறித்தவொரு சேவையினைப் பயன்படுத்துகின்றபோது உங்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு சம்மதம் பெறப்பட்டுள்ள நபர்களுக்கு) வேறு மூன்றாந் திறத்தவர்களுக்கு. நாங்கள் இணைவதற்கு திட்டமிட்டுள்ள அல்லது எங்களைப் பெற்றுக்கொள்ள எண்ணியுள்ள ஏனைய வியாபார நிறுவனங்களுக்கு. 

4.  ஏனைய நிறுவனங்கள் / அமைப்புக்களுடன் உங்களுடையத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்

கீழ்வருவன உள்ளடங்கலான மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர வேறு சந்தர்ப்பங்களில் உங்களுடைய தனிப்பட்டத் தகவல்களை NCEASL இற்கு அப்பால் நாங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டோம்: 
 

  • வேறொரு நபர்இ அமைப்பு அல்லது நிறுவனத்துடன் உங்களுடையத் தனிப்பட்டத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நீங்கள் எங்களை வெளிப்படையாக அனுமதிக்கின்றபோது கீழ்வருவன போன்ற சந்தர்ப்பங்களில்: 

    • சமூக வலைப்பின்னல் தளங்கள் போன்ற மூன்றாந் திறத்தவ தளங்களுடன் உங்களுடைய தனிப்பட்டத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு நீங்கள் எங்களைப் பணிக்கின்றபோது. 

    • நாங்கள் உங்களுடையத் தனிப்பட்டத் தகவல்களை வேறு நிறுவனங்கள்/ அமைப்புக்களுடன் பகிர்ந்துகொண்ட பின்னர் அத்தகைய நிறுவனங்கள்/ அமைப்புக்களால் பெற்றுக்கொள்ளப்படும் தகவல்கள் அவற்றின் அந்தரங்க நடைமுறைகளுக்கு உட்பட்டவையாகும் என்பதனை தயவுசெய்து குறித்து கொள்ளுங்கள். 
       

வேறு அமைப்புக்கள் எங்கள் சார்பாக சேவைகளைப் புரிகின்றபோது; எவ்வாறெனினும் எங்களால் கோரப்பட்ட நோக்கங்களுக்காக அல்லது சட்டத்தால் தேவைப்படுத்தப்படுவதற்கு அப்பால் வேறு நோக்கங்களுக்காக உங்களுடையத் தனிப்பட்டத் தகவல்களைப் பயன்படுத்துவதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். 


சேவைகள்இ சொத்துக்கள் மற்றும்/அல்லது வியாபாரங்கள் தொடர்பாக நாம் தனிப்பட்டத் தகவல்களை மூன்றாந் திறத்தவர்களுடன் பகிரந்துகொள்கின்றபோது குறித்தொதுக்குகின்றபோது அல்லது வேறுவகையில் பரிமாற்றம் செய்கின்றபோது அல்லது எங்களுடைய சேவைகளின் அல்லது சேவைகளின் ஒரு பகுதியின் சொந்தம் அல்லது கட்டுப்பாடு மாற்றமடைகின்றபோது;
 

எங்களுடைய சேவை நியதிகள் அல்லது விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காகஇ எங்களுடைய பயனர்கள் மற்றும் மூன்றாந் திறத்தவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகஇ சட்ட அமுலாக்கம் அல்லது வேறு சட்ட செயன்முறையுடன் இணங்குவதற்காக நாங்கள் மூன்றாந் திறத்தவர்களுடன் தனிப்பட்டத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றபோது அல்லது அத்தகைய வெளிப்படுத்துகை சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டுள்ளது என நாங்கள் நல்லெண்ணத்துடன் நம்புகின்றபோது. 

5.  உங்களுடைய கட்டுப்பாடுகள் உரிமைகள் மற்றும் தெரிவுகள் 

5.1. தரவுகளைத் தக்கவைத்துக் கொள்ளல்

உங்களுடையத் தனிப்பட்டத் தகவலை உங்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு தேவையான அளவிற்கு நாங்கள் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வோம். அத்துடன் அந்தரங்கத்திற்கான இக்கொள்கையில் விபரிக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைந்துக் கொள்வதற்கு அவசியமான காலப்பகுதிவரையிலும் உங்களுடைய தனிப்பட்டத் தகவல்களை நாம் தொடர்ந்தும் வைத்திருப்போம்.சட்டத்தினால் தேவைப்படுத்தப்படின் அல்லது சட்டக் கோரிக்கை அல்லது அரசாங்க விசாரணையொன்றிற்கு குறித்தத் தகவல் உட்பட்டிருப்பின் ஏற்பாகின்ற அத்தகைய சட்டங்கள்இ ஒழுங்குவிதிகள் அல்லது அத்தகைய சட்ட செயன்முறை அல்லது விசாரணையினால் தேவைப்படுத்தப்படுகின்ற காலமளவிற்கு நாங்கள் தனிப்பட்டத் தகவல்களையும் குறிப்பிட்ட சில தகவல்களையும் தக்க வைத்திருப்போம். அத்துடன் எமது உரிமைகள் மற்றும் ஏனையோரது உரிமைகளைப் பாதுகாக்கும்பொருட்டுஇ முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளும்பொருட்டு அல்லது எங்களுடைய சட்ட நியதிகள் அல்லது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்பொருட்டு பிரயோமாகின்ற சட்டத்தினால் அனுமதிக்கப்படுகின்ற அளவிற்கு நாங்கள் தனிப்பட்டத் தகவல்களைத் தக்க வைத்துக் கொள்வோம்.  

 

5.2.  உங்களுடைய தனிப்பட்டத் தகவலை அணுகுவதற்கான மற்றும் கட்டுப்படுத்துவதற்கான உரிமை 

உங்களுடையத் தகவல்களை நாங்கள் சேகரிக்கின்றமை பயன்படுத்துகின்றமை செயன்முறைப்படுத்துகின்றமை களஞ்சியப்படுத்துகின்றமை மற்றும் பகிர்கின்றமை தொடர்பாகக் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் உரிமைகள் மற்றும் தெரிவுகளைப் பிரயோகிப்பதற்கான இயலுமையினை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம். அவை கீழ்வருவனவற்றை உள்ளடக்கும்:

  • சரிப்படுத்தல் அல்லது இற்றைப்படுத்தல்: குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக உங்களுடைய தரவுகள் பிழையாக இருக்குமிடத்து அவற்றை மாற்றுமாறு அல்லது இற்றைப்படுத்துமாறு நீங்கள் எங்களைக் கேட்கலாம்;

  • நீக்குதல்: உங்களுடைய தனிப்பட்டத் தகவல்களுள் சிலவற்றை அல்லது அனைத்தையும் நீக்கும்படி அல்லது அழிக்கும்படி நீங்கள் எங்களைக் கேட்கலாம் (உதாரணமாக இனி உங்களுக்கு சேவைகளை வழங்கத் தேவையில்லையாயின்);

  • தனிப்பட்டத் தகவல்களின் பாவனையினை எதிர்த்தல் மட்டுப்படுத்தல் அல்லது கட்டுப்படுத்தல்: நீங்கள் உங்களுடைய தனிப்பட்டத் தகவல்களுள் சிலவற்றை அல்லது அனைத்தையும் பயன்படுத்துவதனை நிறுத்துமாறு எங்களைக் கேட்கலாம்; 

  • சந்தாக்கள் செய்தித்தாள்கள் மற்றும் விழிப்பூட்டல்கள் தொடர்பான உங்கள் தெரிவுகளை மாற்றுதல்;

  • எங்களுடைய தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் அல்லது நீங்கள் ஆர்வமாய் இருப்பீர்கள் என நாங்கள் கருதுகின்ற தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் தொடர்பான உரிமைச்சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் அல்லது வேறு சந்தைப்படுத்தல்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது தொடர்பாக நீங்கள் தெரிவு செய்யலாம் என்பதுடன் இந்நோக்கத்திற்காக நாங்கள் உங்களுடைய தனிப்பட்டத் தகவல்களைப் பயன்படுத்துகின்றமை தொடர்பாக எந்நேரத்திலும் ஆட்சேபணை செய்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. 

  • வேறு நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் தொடர்பான உரிமைச்சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புக்களை உங்களுக்கு அனுப்புவதனை இயலுமானதாக்குவதற்காக உங்களுடைய தனிப்பட்டத் தகவல்களை வேறு அமைப்புக்களுடன் பகிர வேண்டுமா என்பதனை நீங்கள் தெரிவு செய்யலாம்.  

  • மேலே பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி பல விளம்பர வலைப்பின்னல்கள்இ தரவுப் பரிமாற்றங்கள்இ சந்தைப்படுத்தல் பகுப்பாய்வாளர்கள் மற்றும் ஏனைய சேவை வழங்குநர்களிடமிருந்து இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பதனைத் தெரிவு செய்யலாம். 

  • உங்களுடைய தரவுகளை அணுகுவதற்கான மற்றும்/அல்லது எடுப்பதற்கான உரிமை: உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருத்திருக்கின்ற தனிப்பட்டத் தகவல்களை அணுகுவதற்கான கோரிக்கையினை நீங்கள் செய்யலாம் என்பதுடன் அத்தகையத் தனிப்பட்ட விபரங்களின் பிரதியொன்றினை இயந்திர வாசிப்பு வடிவத்தில் கோரலாம்.
     

நீங்கள் உங்களுடைய கட்டுப்பாடுகள்இ உரிமைகள் மற்றும் தெரிவுகள் அல்லது உங்களுடையத் தனிப்பட்டத் தகவல்களை அணுகுவதற்கான கோரிக்கைகள் என்பவற்றை நாங்கள் உங்களுக்கு அனுப்புகின்ற தொடர்பாடல்களில் உள்ள சந்தாக்களை நீக்குவதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பிரயோகிக்க முடியும் அல்லது உங்களுடைய கோரிக்கை(கள்) அல்லது நீங்கள் எங்களிடமிருந்து தொடர்ச்சியாகப் பெறுவதற்கு விரும்பாத வெளியீடுகள் அல்லது சேவைகள் தொடர்பாக கீழ்வரும் முகவரிக்கு கடிதங்களை அனுப்ப முடியும்: 

 

NCEASL
விளிப்பு: அந்தரங்கம்
முகவரி:

 

5.3. எங்களுடைய சேவைகளை நிறுத்தியபின்னர் தரவுகளைத் தக்கவைத்துக் கொள்தல்

நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பெறுவதனை நிறுத்திக்கொண்ட பின்னரும்கூடஇ அந்தரங்கத்திற்கான இக்கொள்கையில் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உங்களுடையத் தகவல்கள் அனைத்தையும் அல்லது சிலவற்றை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம்:

 

எங்களுடைய சட்டக் கடப்பாடுகளுடன் இணங்குவதற்கு (சட்ட அமுலாக்கக் கோரிக்கைகள் உள்ளடங்கலாக) ஒழுங்கமைவு தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்குஇ முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குஇ அரசாங்க விசாரணைகளுக்கு பதிலளிப்பதற்குஇ பாதுகாப்பைப் பேணுவதற்குஇ மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தினைத் தடுப்படுதற்குஇ எங்களுடைய சேவை நியதிகள் அல்லது ஏனைய நியதிகள் அல்லது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றும் எங்களுடைய மற்றும் ஏனையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவதனை நிறுத்திக்கொண்டதன் பின்னரும் கூட நாங்கள் உங்கள் தனிப்பட்டத் தகவல்களைத் தக்க வைத்துக் கொள்வோம். நாங்கள் தக்கவைத்துக் கொள்கின்ற தரவு ஒன்றில் அடையாளப்படுத்தாதத் தகவல்கள் மற்றும்ஃஅல்லது திரட்டப்பட்ட (இணைக்கப்பட்டத்) தரவுகள். உங்களால் ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளை நாம் கட்டுப்படுத்தாதமையினால்இ அத்தகைய தரவு ஏனையோரால் பார்க்கக்கூடியதாக அல்லது அணுகக்கூடியதாக இருக்கும். 

6.  செயலாக்கத்திற்கான பாதுகாப்பு மற்றும் சட்ட அடிப்படை

6.1. பாதுகாப்பு 

உங்களுடைய தரவுகளை இழப்புஇ முறைகேடான பாவனை மற்றும் அதிகாரமளிக்கப்படாத அணுகுதல் மற்றும் வெளிப்படுத்துகையிலிருந்து பாதுகாக்கும்பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப பௌதீக மற்றும் அமைப்புசார் பாதுகாப்பு பொறிமுறைகளை நாம் அமுல்படுத்துகின்றோம். சாத்தியமான ஊறுபடத்தகு தன்மைகள் மற்றும் தாக்குதல்களை அவதானிப்பதற்காக நாம் எங்களுடைய முறைமைகளை கிரமமாகக் கண்காணிக்கின்றோம். எவ்வாறெனினும் இலத்திரனியல் தொடர்பாடல்கள் மற்றும் தகவல் செயலாக்க தொழிநுட்பங்கள் என்பவற்றின் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோது எங்களுக்கு அனுப்பப்படுகின்ற இணையத்தினூடாகப் பரிமாற்றப்படுகின்ற அல்லது எங்களுடைய சிஸ்டம்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு தகவலினதும் பாதுகாப்பு தொடர்பாக எங்களுக்கு எவ்வித உத்தரவாதங்களையும் வழங்க முடியாது. எங்களுடைய பௌதீக தொழிநுட்ப மற்றும் அமைப்புசார் பாதுகாப்பு பொறிமுறைகளை ஏனையோர் மீறுவதனூடாக தரவுகளை அணுக முடியாது வெளிப்படுத்த முடியாது மாற்ற முடியாது அல்லது அழிக்க முடியாது என்பது தொடர்பாக எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. பாதுகாப்பு மீறப்படுவதனால் தனிப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக நாம் உடனடியாக எமது பயனர்களுக்கு அறிவிப்போம். 

6.2. செயலாக்கத்திற்கான (PROCESSING) சட்ட அடிப்படை

எங்களுக்கு வலிதான சட்ட அடிப்படை காணப்படுகின்றபோது நாங்கள் உங்களுடையத் தனிப்பட்ட  தகவல்களை சேகரிப்போம்இ பயன்படுத்துவோம்இ செயன்முறைப்படுத்துவோம் மற்றும் களஞ்சியப்படுத்துவோம். எங்களுடைய சட்ட அடிப்படையானது கீழ்வருவனவற்றுள் ஒன்றை அல்லது பலவற்றை உள்ளடக்குகின்றது: 

  • சம்மதம் (நீங்கள் சம்மதம் வழங்கியுள்ளீர்கள் அதனை எந்நேரத்திலும் நீங்கள் மாற்றலாம்);

  • ஒப்பந்தமொன்றினை செய்துள்ளமையினூடாக (நீங்கள் கோரியுள்ள சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்காகஇ உங்களுடைய விசாரணைகளுக்கு பதிலளிப்பதற்காக நாங்கள் உங்களோடு செய்துள்ள ஒப்பந்தத்தினை செயற்படு;த்துவதற்கு அல்லது உங்களுடன் ஒப்பந்தமொன்றினை செய்வதற்கு முன்னரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செயலாக்கம் அவசியமானதாகும்);

  • சட்டக் கடப்பாடு (நாம் சட்டங்கள் ஒழுங்குவிதிகள் ஒழுங்கமைவிற்கான அதிகார சபைகள் நீதிமன்றக் கட்டளைகள் அல்லது சட்ட அமுலாக்கத்திற்கான கோரிக்கைகள் என்பவற்றுடன் இணங்குவதற்கு செயலாக்கம் அவசியமாகும்);

  • பிரதான அக்கறை (உங்களுடைய பிரதான அக்கறைகள் அல்லது ஏனைய நபரொருவருடைய முக்கிய அக்கறைகளைப் பாதுகாப்பதற்கு செயலாக்கம் அவசியமாகும்);

  • நெறிமுறையான அக்கறை (எங்களுடைய சேவைகள் அல்லது வாடிக்கையாளர் உறவுகள் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் முரண்பாடுகளைத் தீர்த்தல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தினைத் தடுத்தல் எங்களுடைய சேவைகளின் பாதுகாப்பினைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் மேம்படுத்தல் எங்களுடைய சேவை நியதிகளை நடைமுறைப்படுத்தல் தகவல்களை அடையாளப்படுத்தப்பட முடியாததாக்கவதற்கு மற்றும் அதனைத்தொடர்ந்து அத்தகவல்களைப் பயன்படுத்துவதற்கு)

7.  அந்தரங்கத்திற்கான இக்கொள்கைக்கான மாற்றங்கள்

புதிய தொழிநுட்பங்கள் துறைசார் நடைமுறைகள் ஒழுங்கமைவு தேவைப்பாடுகள் என்பவற்றுக்கு இசைவாவதற்காக அல்லது வேறு நோக்கங்களுக்காக நாம் இக்கொள்கையினை காலத்திற்கு காலம் மாற்றலாம். இம்மாற்றங்கள் பிரதானமானவையாக இருப்பின் அது தொடர்பாக நாம் எமது சேவைகளினூடாக உங்களுக்கு அறிவிப்போம் என்பதுடன் பிரயோகமாகின்ற சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுகின்றபோது நாங்கள் உங்களுடைய சம்மதத்தைப் பெற்றுக் கொள்வோம். நீங்கள் ஏதேனும் மாற்றங்களுக்கு ஆட்சேபிப்பீர்களாயின் நீங்கள் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவதனை நிறுத்திக் கொள்ளலாம். அந்தரங்கத்திற்கான இக்கொள்கைக்கான எங்களுடைய மாற்றங்கள் தொடர்பாக நாங்கள் வெளியிட்ட பின்னர் அல்லது அவற்றை உங்களுக்கு அனுப்பிய பின்னர் நீங்கள் தொடர்ச்சியாக எமது சேவைகளைப் பயன்படுத்துதலானது உங்களுடைய தனிப்பட்டத் தகவலின் சேகரிப்புஇ பாவனை மற்றும் பகிர்தல் என்பன இற்றைப்படுத்தப்பட்ட அந்தரங்கக் கொள்கைக்கு அமைவானது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பதனை வெளிப்படுத்தும். 


8.  கருத்துக்கள் மற்றும் வினாக்கள் 

அந்தரங்கத்திற்கான இக்கொள்கை அல்லது எங்களுடைய அந்தரங்க நடைமுறைகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கருத்து அல்லது வினா காணப்படுமாயின்இ தயவு செய்து info@minormatters.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் முகவரிக்கு எழுதுங்கள்:


விழிப்பு: அந்தரங்கம்
முகவரி: 

அந்தரங்கக் கொள்கை மற்றும் தரவுப் பாதுகாப்பிற்கான ஒப்பந்தம் 

bottom of page