top of page

மதம் மற்றும் சட்டம்

உலகளவில், மத மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம் உலக மனித உரிமைகள் சாற்றுரையின்  பிரிவு 18, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் பிரிவு 18 மற்றும் அனைத்து வகையான மதம் சார் அல்லது நம்பிக்கை சார் சகிப்பின்மை மற்றும் பாகுபாடுகளை நீக்குவதற்கான பிரகடனத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.  மத மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம் அரசியலமைப்பின் அத்தியாயம் III பிரிவு 10 இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது, இது கூறுகிறது, 'ஒவ்வொரு நபருக்கும் சிந்தனை, மனசாட்சி மற்றும் மதத்தின் சுதந்திரத்திற்கு உரிமை உண்டு, அதில் ஒரு மதம் அல்லது நம்பிக்கையை வைத்திருக்க அல்லது ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம் உட்பட. மேலும், பிரிவு 12 இன் பத்தி 2, 'இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களில் ஏதேனும் ஒரு அடிப்படையில் எந்த குடிமகனும் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.' வழிபாடு மற்றும் அனுசரிப்பு தொடர்பாக ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்த  ஒரு தனிநபரிற்கான அடிப்படை உரிமையையும் உறுதிப்படுத்துகிறது. 

மாணவர்கள் மற்றும் வளவாளர்களுக்கு  ஆதாரமாக கருதப்படும் எங்கள் ஊடாடும் சட்டங்களின் காலவரிசை, இலங்கையில் மத நம்பிக்கையின் சுதந்திரம் தொடர்பான முக்கிய சட்டத்தின் மேலோட்டத்தை வழங்குகிறது.
 

bottom of page