top of page

அருங்காட்சியகம். 

மத சுதந்திர அருங்காட்சியகமானது காலனித்துவக் காலத்திலிருந்து இன்று வரையிலான ஆய்வுக் கற்றலுக்கான ஒரு இயக்காற்றல்மிக்க இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்ட முக்கிய கருப்பொருள்களின் வரிசையைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் கட்டிடக்கலை கூறுகள், காப்பக ஆவணங்கள், ஒலி மற்றும் காட்சி  உள்ளடக்கங்கள்,  சமூக உரையாடல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் ஆகியவற்றால் ஆன மெய்நிகர் அருங்காட்சியகத்தைக் கண்டறிய உங்களை அழைக்கிறோம்

முக்கிய நிகழ்வுகள்

இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான 70 நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் வரைபடத்தின் மூலம் அருங்காட்சியகத்தின் கருப்பொருள் பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் காலவரிசை 1815 ஆம் ஆண்டில் கண்டி ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திட்தினைத் தொடர்ந்து ஆரம்பிக்கின்றது.  இது பிரித்தானிய காலனித்துவ சக்திகளின் கீழ் ஒரு ஒற்றையாட்சி நாடாக இலங்கையயை ஒருங்கிணைத்ததுடன், அரசிற்கும் மதத்திற்கும் இடையில் ஒரு முறையான தொடர்பையும் நிறுவியது. இந்த பட்டியல் இலங்கையில் 200 வருட மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை சுருக்கமாக வரிசைப்படுத்துகிறது. இப்பட்டியலில் முக்கிய கருப்பொருள்கள், பங்குபற்றுனர்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டுவதுடன் அருங்காட்சியகத்தின் உள்ளடக்கங்களுக்கு விரைவான வழிகாட்டியாகவும் ஆதாரமாகவும் உள்ளது.

கல்வி

மத மற்றும் நம்பிக்கைச் சுதந்திர  அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடியான தனித்த மின்-கற்றல் தளத்தின் ஆதரவுடன் இந்த அருங்காட்சியகம், ஒரு மெய்நிகர் கற்றல் சூழலாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த தளம் குறுகிய பயிற்சி நெறிகள், வெபினார் நிகழ்ச்சிகள், ஒலி மற்றும் காட்சி உள்ளடக்கம் மற்றும் ஆன்லைன் கலந்துரையாடல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டம் வெறுப்பு பேச்சு மற்றும் அதற்கான எதிர் உத்திகள், மத தேசியவாதம், வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல், டிஜிட்டல் குடியுரிமை, ஆலோசனை சேவைகள் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம் மற்றும் அமைதியை கட்டியெழுப்புதல் உள்ளிட்ட தலைப்புகளை தற்போது உள்ளடக்கியுள்ளது.

அருங்காட்சியக காப்பகங்கள்

மத சுதந்திர அருங்காட்சியகம் விரிவான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆராய்ச்சிகள்,  சமூக பங்களிப்புகள் மற்றும் நிபுணர் பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சாத்தியமான சநதர்ப்பங்களில், அருங்காட்சியக காப்பகங்கள் முக்கிய கருப்பொருள் பகுதிகளில் தங்கள் கற்றலை விரிவுபடுத்த விரும்புகின்ற பார்வையாளர்களுக்கு  இந்த வளங்களை  கிடைக்கச் செய்கின்றது.

ஆன்லைன் கண்காட்சி

சமயம் மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான சமகால கேள்விகள் மற்றும் பிரச்சினைகளுடனான உயிர்ப்பான ஈடுபாட்டை உறுதி செய்யும் ஒரு முயற்சி என்னும் வகையில் அருங்காட்சியகம் தொடர்ச்சியாக கலை மற்றும் அறிவார்ந்த தலையீடுகளை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. இவை அருங்காட்சியகத்திற்கு பங்களிப்பு செய்யும்  சமூகத்துடன் இணைந்து வழங்கப்படும் ஆன்லைன் கண்காட்சி வடிவத்தில் அமைந்து இருக்கும்.

இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது

bottom of page