top of page

ஒன்லைன் கண்காட்சி

2022 ஜூன் மாதத்திலிருந்து இதுவரையில், ஆiழெசஆயவவநசள ஆனது மத சுதந்திரத்திற்கான அருங்காட்சியகத்தைத் தழுவி மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்துடன் தொடர்புடைய 9 பயிலமர்வுகளை நடத்தியுள்ளதுடன் அவற்றினூடாக நாட்டின் தென், கிழக்கு மற்றும் வட மேற்கு மாகாணங்களிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களை அணுகியுள்ளது. அத்துடன் இப்பயிலமர்வுகளுக்கான பின்தொடர் முன்னெடுப்புக்களாகச் செய்யப்பட்ட மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான செய்திப் பரிமாற்றம், பயிலமர்வு மற்றும் கலந்துரையாடல்களினூடாக மேலதிகமாக 1600 இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களை அணுகியுள்ளது. 

ஆiழெசஆயவவநசள  ஆனது 2022 ஜுன் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் வேறுபட்ட மதப் பின்னணிகளைக் கொண்ட 25 இளம் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான இரண்டு நாள் பயிலமர்வொன்றினை நடத்தியது. இப்பயிலமர்விற்கான ஒருங்கிணைப்பு பணிகள் மட்டக்களப்பினைச் சேர்ந்த டுழஉயட ஐnவையைவiஎநள கழச வுழஅழசசழற (டுஐகுவு) எனும் அரச சார்பற்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டன. இப்பயிலமர்வுகளைத் தொடர்ந்து, இதில் பங்குபற்றியிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களுடைய சமுதாயங்களில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினை மேம்படுத்துவதற்காகச் சிறிய உதவித் தொகை வழங்கப்பட்டது. அதற்கமைய, இப்பயிலமர்விற்கான பின்தொடர்வாக, டுஐகுவு அமைப்பானது திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள 90 இளைஞர்களை அணுகுகின்றவகையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பில் மேலதிகமாக மூன்று பயிலமர்வுகளை ஒழுங்கு செய்தது. 

2022, நவம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில், ஆiழெசஆயவவநசள ஆனது புத்தளத்திலுள்ள சமுதாய ஈடுபாடு ஸ்தாபனத்தின் பங்காண்மையுடன் வட மேல் மாகாணத்திலுள்ள 25 இளைஞர்களுக்கு மத சுதந்திரத்திற்கான அருங்காட்சியகத்தினை அடிப்படையாகக் கொண்டு பயிலமர்வொன்றினை நடத்தியிருந்தது. அப்பயிலமர்வினைத் தொடர்;ந்து, பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அப்பிராந்தியத்தில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக சிறிய பண உதவி வழங்கப்பட்டது.

ஆiழெசஆயவவநசள ஆனது தென் மாகாண கல்வித் திணைக்களத்தின் பங்காண்மையுடன் காலியில் 2022 ஜுன் 29 மறறும் 30 ஆம் திகதிகளில் இரண்டு நாள் பயிலமர்வொன்றினை நடத்தியிருந்தது. இப்பயிலமர்வு வக்வெல்லயில் உள்ள முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்றதுடன் அம்மாவட்டத்திலுள்ள 16 மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்ட 36 மாணவர்களைப் பங்குபற்றுநர்களாகக் கொண்டிருந்தது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் தொடர்பான நாட்டின் வரலாறு என்பன தொடர்பாக நடத்தப்பட்ட அமர்வுகள் அருங்காட்சியகத்தின் உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இப்பயிலமர்வினைத் தொடர்ந்து, அச்சிறுவர்கள் மத ஒற்றுமையினை வளர்த்தல் மற்றும் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினை மேம்படுத்தல் ஆகிய தொனிப்பொருட்களில் அம்மாவட்டத்தில் நான்கு செயற்திட்டங்களை அமுல்படுத்தியிருந்தனர்.