top of page
  • Instagram
  • Twitter
  • Facebook

மெய்நிகர் அருங்காட்சியகத்துக்கு (VM) வரவேற்கின்றோம்.   |  பதிப்பு திகதியிடப்பட்டது: ஜுன் 2021 

இவ் ஒப்பந்தமானது (இதனகத்துப் பின்னர் “ஒப்பந்தம்” எனப்படும்), உங்களுக்கும் இலங்கையின் சட்டங்களுக்கு கீழ் முறையாக இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள, மும்மொழிகளிலான மெய்நிகர் அருங்காட்சியகமொன்றினை (இதனகத்து பின்னர் “VM" எனப்படும், இதன்பின்னர் பயன்படுத்தப்பட்டுள்ள இப்பதம் அல்லது வெளிப்பாடு, பின்னணி அவ்வாறு தேவைப்படுத்துமிடத்து அல்லது அனுமதிக்குமிடத்து, மேற்சொல்லப்பட்ட NCEASL மற்றும் அதன் வழியுரிமையாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உரிமை மாற்றம் பெற்றுள்ளோரினால் ஆரம்பிக்கப்பட்ட மும்மொழிகளிலான மெய்நிகர் அருங்காட்சியகத்தினை குறித்தலும் உள்ளடக்குதலும் வேண்டும்) ஆரம்பித்துள்ள நம்பிக்கை நிதியமான NCEASL இற்கும் இடையில் மேலே/கீழே குறிப்பிடப்பட்டுள்ள அத்திகதியில் சனநாயக சோசலிக குடியரசிலுள்ள கொழும்பில் வைத்து செய்யப்படுகின்றது. 

 

VM மற்றும் அதன் சேவைகளின் நோக்கம் மதம் மற்றும் / அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பானத் தகவல்களை ஊடாடுகைமிக்க வடிவடித்தில் பகிர்தலும் சேகரித்து வைத்தலும் ஆகும். இத்தளமானது இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பிலுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான சமூக மரியாதை குறித்த வரலாற்று ரீதியான விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்கும், இலங்கையிலுள்ள அனைத்து சமுதாயங்களுக்கிடையிலும் சகவாழ்வினை  மேம்படுத்துவதற்கும் மற்றும் எந்தவொரு மதம் அல்லது நம்பிக்கை தொடர்பாகவும் இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ள முக்கியமான விடயங்களை முன்னிலைப்படுத்திக் காட்டுவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

VM சேவைகளைப் பயன்படுத்துவதனூடாக நீங்கள் இங்கு வழங்கப்பட்டிருக்கின்ற நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்படுகின்றீர்கள். அவ்வாறு நீங்கள் உடன்படவில்லையாயின், நீங்கள் VM சேவைகளைத் தரவிறக்கம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம். 

1.  உரிமம்

VM சேவைகள் தொடர்பில் உங்களுக்கு உரிமமளிக்கப்பட்டுள்ளனவே தவிர அவை உங்களுக்கு விற்கப்படவில்லை. VM ஆனது உங்களுக்கு VM சேவைகளைப் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட, பரிமாற்றமுடியாத, மீளப்பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் பிரத்தியேகமல்லாத உரிமத்தினை வழங்குகின்றது. இவ் ஒப்பந்தத்திற்கு நீங்கள் உடன்படுவதற்கு அமைய நீங்கள் உங்களது வர்த்தகமல்லாத பாவனையின் பொருட்டு அச்சேவைகளுக்கான அணுகுதலைக் கொண்டிருப்பீர்கள். 

 

VM இனால் வெளிப்படையாக அதிகாரமளிக்கப்படாதவரையில் அல்லது சட்டத்தினால் அனுமதிக்கப்படாதவரையில், நீங்கள் எந்தவொரு VM சேவையினையும் அல்லது  உள்ளடக்கத்தினையும் (அப்பதங்கள் கீழே வரையறுக்கப்பட்டுள்ளதற்கிணங்க) அணுகவோ, பிரதி செய்யவோ, செம்மைப்படுத்தவோ அல்லது பகிரவோ முடியாது. VM இனால் வெளிப்படையாக அதிகாரமளிக்கப்படாதவரையில் அல்லது சட்டத்தினால் அனுமதிக்கப்படாதவரையில், நீங்கள் தயாரித்தவரை மாற்றவோ அல்லது VM சேவைகளிலிருந்து மூலக் கோவைகள் அல்லது வேறு தரவுகளைப் பிரித்தெடுத்தோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்தலாகாது. VM  அல்லது அதன் உரிமையாளர்கள் VM சேவைகளின் அனைத்து உரிமைகள், மற்றும் அக்கறை மற்றும் அதனோடிணைந்துள்ள புலமைச் சொத்திற்கான உரிமைகள் உள்ளடங்கலாக ஏனைய அனைத்து உரிமைகளையும் சொந்தங் கொண்டுள்ளனர் அல்லது தமக்கென வைத்துள்ளனர்.  

2.  உள்ளடக்கம்

VM சேவைகள் உள்ளடக்கங்களை உள்ளடக்கியுள்ளது. உள்ளடக்கம் என்பது VM சேவைகளிலிருந்து தோன்றுகின்ற அல்லது அதிலிருந்து வருகின்ற மென்பொருள், தொழிநுட்பம், பிரதி உரை, கருத்துக்கள், பதிவுகள், உரையாடல் பதிவுகள், முகக்குறிப்புக்கள், விட்ஜெட்கள், குறுந்தகவல்கள், இணைப்புக்கள், மின்னஞ்சல்கள், இசை, சத்தம், வரைபடங்கள், படங்கள், காணொளி, சுருக்கக்குறியீடுகள் மற்றும் அனைத்து ஒலி, ஒளி அல்லது வேறு ஆவணங்கள், அதேபோல எமது வலைத்தளத்தின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் என்பனவற்றைக் குறிக்கும். அத்துடன் உள்ளடக்கம் என்பது பாவனையாளரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தினையும் (UGC) குறிக்கும். UGC என்பது பயனர்களினால் வெளியிடப்பட்டக் கருத்துக்களப் பதிவுகள், உரையாடல் பதிவுகள், கலைப்படைப்புக்கள் மற்றும் VM சேவைகளுக்கு பயனர்களால் பங்களிப்பு செய்யப்பட்ட வேறு உள்ளடக்கங்கள் என்பனவற்றையும் குறிக்கும். அனைத்து உள்ளடக்கங்களும் ஒன்றில் VM இனால் அல்லது அதன் உரிமமளார்களினால் சொந்தங் கொள்ளப்பட்டிருக்கும் அல்லது VM  இற்கு அல்லது அதன் உரிமமாளர்களுக்கு கீழே உள்ள பிரிவு 4 இற்கு அமைய உரிமமளிக்கப்பட்டிருக்கும். 

3.  VM சேவைகளின் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் இற்றைப்படுத்தல்கள் 

எந்தவொரு VM சேவையோ அல்லது உள்ளடக்கமோ அனைத்து நேரங்களிலும், அனைத்து இடங்களிலும் அல்லது கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் நேரத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்குமென்றோ அல்லது குறித்தவொரு VM சேவையினை அல்லது உள்ளடக்கத்தினை எந்தவொரு குறிப்பான காலப்பகுதிக்கேனும் தொடர்ச்சியாக வழங்குவோமென்றோ எவ்வித உத்தரவாதத்தினையும் நாம் வழங்குவதில்லை. VM சேவைகள் அனைத்து சாதனங்களிலும், குறித்தவொரு இணைய அல்லது தொடர்பாடல் சேவை வழங்கியினூடாக அல்லது அனைத்து புவியியல் பிரதேசங்களிலும் அணுகப்படக்கூடியதாக இருக்குமென எவ்வித உத்தரவாதத்தினையும் நாம் வழங்குவதில்லை. 

VM ஆனது காலத்திற்கு காலம் உங்களுக்கு அறிவிக்காமலேயே எந்தவொரு VM சேவையினையும் அல்லது உள்ளடக்கத்தினையும் இற்றைப்படுத்தலாம், மாற்றலாம் அல்லது மெருகூட்டலாம். VM சேவைகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்பொருட்டு இவ் இற்றைப்படுத்தல்கள் அல்லது மெருகூட்டல்கள் தேவைப்படுத்தப்படலாம். VM ஆனது மென்பொருள் மற்றும் VM சேவைகளை சமநிலைப்படுத்தும்பொருட்டு குறிப்பிட்ட சில அளவுருக்களை இற்றைப்படுத்த வேண்டியேற்படலாம் அல்லது மீள அமைக்க வேண்டியேற்படலாம். இவ் இற்றைப்படுத்தல்கள் அல்லது ‘மீட்டமைவுகள்’ உங்களுடைய நடவடிக்கைகள் சிலவற்றில் தடைகளை ஏற்படுத்தலாம் என்பதுடன் உங்களுடைய கட்டுப்பாட்டின் கீழுள்ள பண்புநலன்கள், நிகழ்வுகள், குழுக்கள் அல்லது வேறு உரித்துடைமைகளிலும் பாதிப்பு செலுத்தலாம். 

4.  பயனரால் (உங்களால்) உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் 

உங்களால் உருவாக்கப்படுகின்ற உள்ளடக்கங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். மூன்றாந் திறத்தவர் ஒருவருடைய புலமைச் சொத்து உரிமைகளை மீறுகின்ற அல்லது சட்டம் அல்லது இவ் ஒப்பந்தம் அல்லது அந்தரங்கத்திற்கான அல்லது வெளியிடுவதற்கான மூன்றாந்திறத்தவரின் உரிமை என்பனவற்றை மீறுகின்ற எந்தவொரு உள்ளடக்கத்தினையும் நீங்கள் பதிவேற்றம் செய்யக்கூடாது. 

VM ஆனது அதன் தற்துணிபின்பேரில், பயனரால் உருவாக்கப்படுகின்ற உள்ளடக்கங்கள் இவ் ஒப்பந்தத்தினை, சட்டத்தினை அல்லது மூன்றாந் திறத்தவரொருவருடைய புலமைச் சொத்து உரிமைகளை மீறுகின்றது என்பது உள்ளடங்கலாக ஏதேனுமொரு காரணத்திற்காக பயனரால் உருவாக்கப்படுகின்ற அத்தகைய உள்ளடக்கங்களை நீக்க முடியும், செம்மைப்படுத்த முடியும் அல்லது முடக்க முடியும். VM ஆனது பயனரால் உருவாக்கப்படுகின்ற உள்ளடக்கங்களை அல்லது வேறு உள்ளடக்கங்களை நீக்குவதற்கான அல்லது நீக்காதிருப்பதற்கான எந்தவொரு பொறுப்பினையோ அல்லது கடப்பாட்டினையோ  கொண்டிருப்பதில்லை. VM ஆனது பயனரால் உருவாக்கப்படுகின்ற அனைத்து உள்ளடக்கங்களையும் முன்னாய்வு செய்வதில்லை என்பதுடன் சேவைகளில் கிடைக்கக்கூடியதாக உள்ள எந்தவொரு VM சேவைக்கும் அனுமதி வழங்குவதில்லை. 

நீங்கள் உங்களால் உருவாக்கப்படுகின்ற உள்ளடக்கங்களினூடாகப் (பயனரால் உருவாக்கப்படுகின்ற உள்ளடக்கங்களினூடாகப்) பங்களிப்பு செய்கின்றபோது, VM இற்கும், அதன் உரிமம் வழங்குபவர்கள் மற்றும் உரிமதாரர்கள் ஆகியோருக்கும் அதனை, அல்லது அதன் ஒரு பகுதியினை ஏதேனும் ஒரு முறையில் அல்லது வடிவத்தில், தற்போது அறியப்பட்டுள்ள அல்லது பின்னர் கண்டறியப்படுகின்ற ஏதேனுமொரு ஊடகத்தில் அல்லது அரங்கில், உங்களுக்கு எவ்வித அறிவிப்பு, கட்டணம் அல்லது அங்கீகரிப்பினை வழங்காமலேயே, பயன்படுத்துவதற்கான, தொகுப்பதற்கான, சேகரித்து வைப்பதற்கான, மீளுருவாக்கம் செய்வதற்கான, மெருகூட்டுவதற்கான,  அதனைப் பின்பற்றி வேறு தயாரிப்புக்களை உருவாக்குவதற்கான, பகிரங்கமாக செயற்படுத்துவதற்கான, பகிரங்கமாகக் காட்சிப்படுத்துவதற்கான அல்லது வேறுவகையில் பரிமாற்றுவதற்கான அல்லது தொடர்பாடல் செய்வதற்கான பிரத்தியேகமல்லாத, நிலையான, மாற்றக்கூடிய, உலகளாவிய, உப அனுமதியினை வழங்கக்கூடிய அனுமதியினை வழங்குகின்றீர்கள். அத்துடன் சேவையில் உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தினை அணுகக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய ஏனைய அனைத்து பயனர்களுக்கும் நீங்கள் உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தினை, உங்களுக்கான மேலதிக அறிவிப்பு, அங்கீகாரம் அல்லது பணப்பெறுமதி எதனையும் வழங்காது பயன்படுத்துவதற்கான, பிரதி செய்வதற்கான, மெருகூட்டுவதற்கான, காட்சிப்படுத்துவதற்கான, செயற்படுத்துவதற்கான, அதனைப் பின்பற்றி வேறு தயாரிப்புக்களை உருவாக்குவதற்கான மற்றும் வேறுவகையில் தொடர்பாடல் அல்லது பகிர்ந்தளிப்பு செய்வதற்கான உரிமையினை வழங்குகின்றீர்கள். 

5.  நடத்தை விதிகள்

நீங்கள் VM  சேவைகளை அணுகுகின்றபோது அல்லது பயன்படுத்துகின்றபோது, நீங்கள் பின்வருவனவற்றைச்; செய்யாதிருப்பதற்கு உடன்படுகின்றீர்கள். 

  • ஏதேனும் சட்டம், விதி அல்லது ஒழுங்குவிதியினை மீறுதல்.

  • ஏதேனுமொரு VM சேவையினை ஹேக் செய்தல் (அனுமதியளிக்கப்படாத அணுகுதலைப் பெறுதல்) அல்லது விரிசலடையச் செய்தல் உள்ளடங்கலாக ஏதேனுமொரு VM சேவையில் அல்லது VM சேவையினை வழங்குவதற்கு அல்லது அதற்கு துணைபுரிவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஏதேனும் சேவை வழங்கி அல்லது வலையமைப்பில் தலையீடு செய்தல் அல்லது இடையூறு செய்தல். 

  • சேவையொன்றிற்கு அல்லது மற்றுமொருவருடைய கணிணிக்கு அல்லது ஆதனத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடிய அல்லது அவற்றில் தலையீடு செய்யக்கூடிய, சேவை அல்லது வலையமைப்பினை கிடைக்கக்கூடியதல்லாததாக்கல், ஸ்பேமிங், ஹேக்கிங் அல்லது கணிணி வைரஸ்கள், தீங்கான கணிணி நிகழ்ச்சிகள் (WORMS), பயனர்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய தீங்கான மென்பொருட்கள் (Trojan Horse), செய்திகளை மற்றும் பதிவுகளை இரத்து செய்யக்கூடிய மென்பொருட்கள் (cancelbots), தரவுகளை இரகசியமாகத் திருடக்கூடிய மென்பொருள் (spyware), சேதமாக்கப்பட்டுள்ளக் கோவைகள் (corrupted files) மற்றும் திட்டமிடப்பட்டுள்ள குறித்த நேரத்திற்கு பின் குறித்த சேவையை அல்லது வலையமைப்பை செயலிழக்கச் செய்யும் மென்பொருள்/நிகழ்ச்சித்திட்டம் (timebombs) போன்ற ஏதேனும் மென்பொருள் அல்லது நிகழ்ச்சித் திட்டத்தினைப் பயன்படுத்தல்.

  • முறையற்ற, இழிவான, துன்புறுத்துகின்ற, மரியாதையற்ற, அச்சுறுத்துகின்ற, வெறுப்பான, குற்றம் சுமத்துகின்ற, அநாகரிகமான, ஆபாசமான, பாலியல் வெளிப்படையான, அவதூறான, விதிகளை மீறுகின்ற, ஏனையோரின் அந்தரங்கத்தில் தலையீடு செய்கின்ற அல்லது வேறுவகையில் நியாயமான காரணங்களுக்காக எதிர்க்கத்தக்க ஏதேனும் பயனரால் உருவாக்கப்படுகின்ற உள்ளடக்கங்களுக்கு பங்களிப்பு செய்தல் அல்லது அத்தகைய ஏதேனும் செயற்பாடு, குழு அல்லது குழாமில் பங்குபற்றுதல். 

  • சட்டமுரணான அல்லது நீங்கள் சுதந்திரமாகப் பகிர்வதற்கு உங்களுக்கு அனுமதியில்லாத பயனரால் உருவாக்கப்பட்ட ஏதேனும் உள்ளடக்கங்கள் அல்லது உள்ளடக்கங்களை வெளியிடுதல், பதிவு செய்தல் அல்லது பகிர்தல். 

  • VM இனால் (நியாயமாக மற்றும் அகவயமாகச் செயற்பட்டு) முறையற்றது, இழிவானது, வெறுப்பானது, துன்புறுத்துகின்றது, மரியாதையற்றது, அவதூறானது, அச்சுறுத்துகின்றது, ஆபாசமானது, பாலியல் வெளிப்படையானது, விதிகளை மீறுகின்றது, ஏனையோரின் அந்தரங்கத்தில் தலையீடு செய்கின்றது, அநாகரிகமானது, குற்றம் சுமத்துகின்றது, நாகரீகமற்றது அல்லது சட்டமுரணானது என தீர்மானிக்கப்படுகின்ற தலைப்பு, பெயர், திரைப் பெயர், உண்மையான மனிதர்களின் இணையப் பிரதிநிதி (AVATAR), கற்பனா கதாபாத்திரங்கள் (PERSONA) அல்லது வேறு ஆவணம் அல்லது தகவல் போன்ற ஏதேனும் உள்ளடக்கத்தினை வெளியிடுதல், பதிவு செய்தல், பதிவேற்றுதல் அல்லது பகிர்தல்.

  • தனிப்பட்டத் தொடர்பாடல் தவிர்ந்த ஏதேனும் நோக்கங்களுக்காகச் செய்திகளைப் பதிவிடுதல். விளம்பரப்படுத்தல், ஸ்பேம், தொடர்ந்து பரிமாற்றப்படுகின்ற கடிதங்கள், பிரமிட் திட்டங்கள் மற்றும் வேறு வகையான பரிவுக் கோரிக்கைகள் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் என்பன தடை செய்யப்பட்டுள்ள செய்திகளுக்குள் உள்ளடங்கும். 

  • வேறொருவராக ஆள்மாறாட்டம் செய்தல் அல்லது நீங்கள் VM இன் அலுவலர் அல்லது பிரதிநிதி என பொய்யாகக் காட்டுதல். 

  • உதவிக்கான அல்லது முறைப்பாட்டிற்கான பொத்தான்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது VM அலுவலர்களுக்கு பொய்யான அறிக்கைகளைச் செய்தல்.

  • VM சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்டத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தல் அல்லது திருடுதல். 

  • தரவுகளை உராய்தல் (SCRAPING) அல்லது ஆவணங்களைப் பிரதி செய்தல் போன்ற ஏதேனுமொரு நோக்கத்திற்காக ஏதேனும் தானியங்கி இயந்திரம் (ROBOT), தன்னியக்கத் தேடுகைக்கான மென்பொருள் (SPIDER), அல்லது வேறு தன்னியக்க சாதனங்கள் அல்லது செயன்முறைகளைப் பயன்படுத்துதல்.

  • VM இனால் உங்களுக்கு மெருகூட்டுவதற்கான குறிப்பான அதிகாரமளிக்கப்படாத VM சேவையொன்றின் ஏதேனும் கோவை அல்லது அதன் ஏதேனும் பகுதியினை மெருகூட்டுதல்.  

  • நியாயமற்ற நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும்பொருட்டு VM சேவையில், அதிகாரமளிக்கப்படாத மென்பொருள் நிகழ்;ச்சிகள் அல்லது கருவிகளைப் (‘தன்னியக்க’, ‘மெக்ரோ’, ‘ஹெக்’ அல்லது மோசடிக்கான மென்பொருள்கள் போன்றன) பயன்படுத்தல் அல்லது பகிர்தல், அல்லது கணிணி அமைப்பிலுள்ள குறைபாட்டை பயன்படுத்தி தீங்கிழைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் (EXPLOITS), அனுமதியளிக்கப்படாத அணுகலைப் பெற்றுக்கொள்வதற்கான மென்பொருள் (BUGS) என்பனவற்றைப் பயன்படுத்தல். 

  • மோசடி அல்லது ஏனைய போட்டித்தன்மைக்கெதிரான நடத்தை (ஊக்குவித்தல், கூட்டு மோசடி, மெட்ச்மேக்கிங் மோசடி போன்ற) என்பனவற்றில் ஈடுபடல் அல்லது அவற்றிற்கு உதவுதல். 

  • போலியான மென்பொருள் அல்லது VM உள்ளடக்கத்தினைப் பயன்படுத்தல் அல்லது பகிர்தல்.

  • VM  இனால் கட்டுப்படுத்தப்படாத அல்லது அதிகாரமளிக்கப்படாத ஏதேனும் சேவையில் அல்லது சேவையினூடாக VM சேவையொன்றினைப் பயன்படுத்துவதற்கு முயற்சித்தல்.

  • VM சேவையின் அமைதியான, நீதியான மற்றும் மரியாதைமிக்க மத சூழலை குறிப்பிடத்தக்க வகையில் இடையூறு செய்கின்ற ஏதேனும் வேறு நடவடிக்கையில் ஈடுபடுதல். 

  • VM சேவையினை அல்லது உள்ளடக்கத்தினைப் பயன்படுத்துவதனூடாக இன அல்லது வகுப்புவாத ஒற்றுமையின்மையினை அல்லது வெறுப்பு பேச்சினைத் தூண்டுதல். 

  • ஏதேனும் VM சேவையில் பகிரங்கமாகக் கிடைக்கக்கூடியதாகவுள்ள பயனர்கள் பற்றியத் தகவல்களை, அத்தகையப் பயனர்களை உலகில் அடையாளம் காண முயற்சித்தல் உள்ளடங்கலாக அச்சேவையுடன் தொடர்பற்ற வேறு ஏதேனும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்.

  • மேலே விபரிக்கப்பட்டுள்ள ஏதேனும் தடைசெய்யப்பட்டுள்ள செயற்பாட்டினை ஊக்குவித்தல், மேம்படுத்தல் அல்லது அதில் பங்கெடுத்தல். 


VM சேவைகளைப் பயன்படுத்துகின்ற நீங்களோ அல்லது வேறு எவருமோ இத்தகைய விதிகளை மீறிவிட்டு அம்மீறலுக்கான நிவாரணத்தினைப் புரிவதற்கு தவறுகின்றபோது குறிப்பிட்ட அல்லது அனைத்து VM சேவைகளுக்கான மற்றும்/அல்லது உள்ளடக்கங்களுக்கான அணுகுதலை மீளப்பெற்றுக்கொள்வது உள்ளடங்கலாக உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை VM  மேற்கொள்ளலாம். 

 
இவ்விதிகளுள் எவற்றையேனும் மீறுகின்ற வேறொரு பயனர் தொடர்பில் நீங்கள் அறிவீர்களாயின், அதனைத் தயவு செய்து, குறித்த VM சேவையிலுள்ள “உதவி”(HELP) அல்லது “துஷ்பிரயோகத்தை முறைப்பாடு செய்க” (Report Abuse) ஆகிய செயற்பாடுகள் கிடைக்கக்கூடியதாகவிருக்குமிடத்து அவற்றினூடாகவும் அல்லது ……………………………என்ற இணைப்பிலுள்ள வாடிக்கையாளர் உதவி நிலையத்தினை தொடர்பு கொள்வதனூடாகவும் அறிக்கை செய்க.


VM ஆனது அதன் தற்துணிபின்பேரில்VMசேவைகளில் உள்ள இயங்கலை செயற்பாடு அல்லது உள்ளடக்கத்தினைக் கண்காணிக்க அல்லது பதிவு செய்ய முடியுமென்பதுடன் அதன் தற்துணிபின்பேரில் எந்தவொரு VM சேவையிலுள்ள எந்தவொரு உள்ளடக்கத்தினையும் நீக்க முடியும். VM சேவையிலுள்ள உங்களுடைய தொடர்பாடல்கள் மற்றும் உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் என்பன பகிரங்கமானவை என்பதுடன் அவற்றை ஏனையோரால் பார்க்க முடியும் என்பதனை நினைவிற் கொள்ளுங்கள். 

 

VM சேவைகளை நீங்கள் பயன்படுத்துகின்றமையானது …………….  என்ற இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள VM இன் அந்தரங்க மற்றும் தரவுப் பாதுகாப்புக் கொள்கைக்கு அமைவானதாகும். இக்கொள்கைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவை இவ் ஒப்பந்தத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன. 

6.  பொறுப்பு துறப்பு

VM இல் அதன் பயனர்களால் அல்லது வேறுவகையில் வெளியிடப்பட்டுள்ள பயனரால் உருவாக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்கள், வேறு உள்ளடக்கங்கள் அல்லது கருத்துக்கள் VM இன் கருத்துக்கள், நிலைப்பாடுகள் அல்லது நம்பிக்கைகளைப் பிரதிபலிக்காது. 

VM இல் அதன் பயனர்களால் வெளியிடப்பட்டுள்ள பயனரால் உருவாக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்கள், வேறு உள்ளடக்கங்கள் அல்லது கருத்துக்களின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை அல்லது பயன்பாட்டுத்தன்மை தொடர்பாக எவ்வித பொறுப்பினையும் VM  ஏற்றுக் கொள்ளாது. 

7.  முடிவுறுத்தல் மற்றும் ஏனைய தண்டனைகள்

இவ் ஒப்பந்தமானது ஒன்றில் உங்களால் அல்லது VM இனால் முடிவுறுத்தப்படுகின்றவரையில் வலுவிலிருக்கும். 

 

நீங்கள் இவ் ஒப்பந்தத்தினை மீறியுள்ளீர்கள் அல்லது VM சேவைகள் சட்ட முரணாக, முறையற்றரீதியில் அல்லது மோசடியாகப் பாவிக்கப்பட்டுள்ளன என தீர்மானித்தால், VM ஆனது இவ் ஒப்பந்தத்தினை எந்நேரத்திலும் முடிவுறுத்தலாம். சாத்தியமான சந்தர்ப்பங்களில், VM ஆனது முடிவுறுத்தல் தொடர்பாக உங்களுக்கு அறிவிக்கும்.

 

இவ் ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட்டதன்பேரில், சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அதனை அணுகுவதற்கான இவ் ஒப்பந்தத்தின்கீழான உங்களது உரிமமும் முடிவுறுத்தப்படும்.

முடிவுறுத்துவதற்கு பதிலாக, ஏதேனும் முடிவுறுத்தலுக்கு முன்பு, VM ஆனது உங்களுக்கு எச்சரிக்கையொன்றினை வழங்கலாம், VM சேவைகளுக்கான உங்களுடைய அணுகுதலை இடைநிறுத்தலாம் அல்லது மாற்றலாம், இவ் ஒப்பந்தத்திற்கு முரணாக உள்ள ஏதேனும் உள்ளடக்கத்தினை நீக்கலாம் அல்லது VM சேவைகளை அணுகுவதிலிருந்து உங்களது சாதனம் அல்லது இயந்திரத்தினைத் தடை செய்யலாம்.  

 

ஏதேனும் நடவடிக்கை தவறுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீங்கள் நம்புவீர்களாயின், ……………………………   என்ற இணைப்பினூடாகத் தயவு செய்து வாடிக்கையாளர் ஆதரவு மையத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள். 

நீங்கள் இவ் ஒப்பந்தத்தினை முடிவுறுத்துவீர்களாயின், நீங்கள் அனைத்து VM சேவைகளின் பாவனையினையும் இடைநிறுத்திக் கொள்வதற்கு உடன்படுகின்றீர்கள்.

 

இவ் ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட்டதன்பேரிலும், இவ் ஒப்பந்தத்தின் 4,6,7-8,10-14 ஆகிய பிரிவுகள் தொடர்ந்து வலுவிலிருக்கும். 

8.  தரவின் பாவனை

நீங்கள் VM சேவையினைப் பயன்படுத்துகின்றபோது, VM ஆனது உங்களுடைய கணிணி அல்லது சாதனம், வன்பொருள், உட்புகுத்தப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் செயற்பாட்டு முறைமை (IP முகவரி மற்றும் சாதனத்தின் ID போன்றன), உங்களுடைய சேவையின் பயன்பாடு தொடர்பானத் தகவல், மத நடவடிக்கைகள், பங்குபற்றுகை மற்றும் பயன்பாட்டு புள்ளிவிபரங்கள், சிஸ்டம் ஊடாடுகைகள் மற்றும் புற வன்பொருள் உள்ளடங்கலாக உங்களுடைய கணிணி அல்லது சாதனத்திலிருந்து தரவுகளைச் சேகரிக்கவும் சேர்த்து வைக்கவும் முடியும். உங்களுடைய சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள இத்தகைய தரவுகள் உங்களுடைய சாதனம் இணையத்துடன் தொடர்புறுகின்றபோது VM இற்கு பரிமாற்றப்படும். VM ஆனது இத்தகவல்களை, ………………..என்ற இணைப்பில் பார்க்கக்கூடியதாகவுள்ள VM இன் அந்தரங்கக் கொள்கை மற்றும் தரவுப் பாதுகாப்பு என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மற்றும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகப் பயன்படுத்தும். 

9.  ஏனைய மென்பொருள், பயன்பாடுகள், கருவிகள்

VM  சேவைகள் ஆனது மென்பொருள், மென்பொருள் இற்றைப்படுத்தல்கள் அல்லது திட்டுகள் (கணிணியில் ஏதேனும் பிழையானதை சரிசெய்வதற்கான கட்டளைகளின் தொகுப்பு) அல்லது வேறு பயன்பாடுகள் மற்றும் கருவிகளை VM இலிருந்து அல்லது அதன் உரிமத்தைக்; கொண்டுள்ளோரிடமிருந்து உங்களுடைய கணிணியில், பொழுதுபோக்கு முறையில் அல்லது சாதனத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு உங்களைத் தேவைப்படுத்தலாம், அல்லது பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு உங்களை அனுமதிக்கலாம். இத்தகைய தொழிநுட்பங்கள் தளங்களுக்கு தளம் வேறுபட்டதாயும், VM சேவைகளின் செயற்பாடு உங்களுடைய கணிணி மற்றும் வேறு உபகரணத்தின் தன்மையின் அடிப்படையில் வேறுபட்டதாயும் காணப்படலாம். இத்தகைய தொழிநுட்பங்களுக்கான சில குறிப்பிட்ட இற்றைப்படுத்தல்கள் VM சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் பொருட்டு தேவைப்படுத்தப்படலாம் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள்.  

10. மூன்றாந் திறத்தவர்கள் 

சில சேவைகள் VM இனால் சொந்தங் கொள்ளப்படாத அல்லது கட்டுப்படுத்தப்படாத சேவை வழங்குனர்களில் ஒழுங்குசெய்யப்படுகின்ற ஏதேனும் மத செயற்பாடுகளில் பங்குபற்றுவதற்கானத் தெரிவினை உங்களுக்கு வழங்கலாம். VM ஆனது இத்தகைய சேவைகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதுடன் அவற்றில் அல்லது அவற்றினூடான உங்களது சேவையின் பாவனைக்கு பொறுப்பாகாது. இத்தகைய மூன்றாந் திறத்தவர்களின் சேவைகள் உங்களை மேலதிக அல்லது வேறுபட்ட நியதிகள் மற்றும் மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தும். VM சேவைகளானது மூன்றாந் திறத்தவ வலைத்தளங்களுக்குரிய இணைப்புக்களை (ஹைபர்லிங்க்ஸ்) கொண்டிருக்கும். அத்தகைய தளங்கள் உங்களிடமிருந்து தரவுகளைச் சேகரிக்கலாம் அல்லது தனிப்பட்டத் தகவல்களைத் திருடலாம். VM ஆனது இத்தகையத் தளங்களைக் கட்டுப்படுத்தாது என்பதுடன் அவற்றின் உள்ளடக்கம் அல்லது அவை தனிப்பட்டத் தகவல்களைச் சேகரித்தல், பாவித்தல் அல்லது வெளிப்படுத்தல் என்பவற்றுக்கு பொறுப்பாகாது. 

11.  உத்தரவாதங்கள்; கடப்பாட்டிற்கான மட்டுப்பாடு

VM சேவைகளுக்கு உரிமமளிக்கப்பட்டுள்ளன என்பதுடன் “அவை அவ்வாறே” வழங்கப்படுகின்றன. நீங்கள் உங்களுடைய சொந்த அபாயத்தின் அடிப்படையிலேயே அவற்றைப் பயன்படுத்துகின்றீர்கள். பிரயோகமாகின்ற சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள முழுமையானப் பரப்பிற்கு, VM ஆனது உற்பத்தி, தரம் பற்றிய திருப்தி, குறித்தவொரு நோக்கத்திற்கு பொருந்தும் தன்மை, மூன்றாந் திறத்தவர்களின் உரிமைகள் மீறப்படாமை தொடர்பான உட்கிடையான உத்தரவாதங்கள் மற்றும் பாவனை அல்லது நடைமுறையின் விளைவாகத் தோன்றுகின்ற உத்தரவாதங்கள் உள்ளடங்கலாக எவ்வித வெளிப்படையான, உட்கிடையான அல்லது நியதிச்சட்ட உத்தரவாதங்களையும் வழங்காது. VM ஆனது நீங்கள் சேவைகளை அனுபவிப்பதில் ஏற்படக்கூடியத் தலையீடுகளுக்கு எதிராக எவ்வித உத்தரவாதங்களையும் வழங்காது; VM சேவைகள் உங்களது தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யுமென உத்தரவாதம் அளிக்காது, VM சேவைகளின் செயற்பாடு இடையூறுகளுக்கு உள்ளாக்கப்படாது அல்லது VM சேவைகள் தவறுகள், பிழைகள், ஊழல், சேதம், தலையீடுகள், ஹெக்கிங் அல்லது வைரஸ்கள் இன்றி வழங்கப்படுமென உத்தரவாதமளிக்காது அல்லது VM சேவைகள் வேறு ஏதேனும் மென்பொருளுடன் இணைந்து செயற்படும் அல்லது அதனுடன் பொருந்தக் கூடியதாக இருக்குமென உத்தரவாதமளிக்காது. VM ஆனது VM இனூடாக வழங்கப்படுகின்ற ஏதேனும் மூன்றாந் திறத்தவரின் பொருள் அல்லது சேவை குறித்து உத்தரவாதமளிக்காது. 

 

பிரயோகமாகின்ற சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள முழுமையானப் பரப்பிற்கு, VM மற்றும் அதன் பணியாளர்கள், உரிமம்  பெற்றுள்ளோர் மற்றும் வியாபாரப் பங்காளர்கள் என்போர், VM இவ் ஒப்பந்தத்தை மீறுகின்றமையினால் ஏற்படுத்தப்பட்டனவல்லாத ஏதேனும் இழப்புக்களுக்கு அல்லது நேரடியற்ற, எதேச்சையான, விளைவான, தண்டனைக்குரிய அல்லது விசேட சேதங்களுக்கு பொறுப்பாக மாட்டார்கள். விலக்களிக்கப்பட்டுள்ள சேதங்களின் வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: உதாரணமாக, நிதி இழப்பு (வருமான இழப்பு அல்லது இலாப இழப்பு போன்றன), பொருட்கள் அல்லது சேவைகளைப் பதிலீடு செய்வதற்கான செலவு, வியாபாரத்தில் இடையூறு அல்லது வியாபார நிறுத்தம், தரவுகளை இழத்தல், நல்லெண்ணத்தை இழத்தல், மற்றும் கணிணி செயலிழத்தல் அல்லது தவறியக்கம். இவ் உரிமம் அல்லது VM சேவையிலிருந்து அல்லது அதனுடன் தொடர்புற்ற, ஒப்பந்தம், தீங்கியல், நியதிச்சட்டம், கடும்பொறுப்பு கடப்பாடு அல்லது வேறு ஏதேனுமொரு  வகையினை அடிப்படையாகக் கொண்ட, எந்தவொரு கோரிக்கை தொடர்பாகவும் இம்மட்டுப்பாடு ஏற்புடையதாகும். அத்தகைய சேதத்திற்கான சாத்தியப்பாட்டுத்தன்மை பற்றி அறிந்திருக்கின்ற அல்லது அறிந்திருக்க வேண்டிய சூழ்நிலைகளிலும் இம்மட்டுப்பாடு ஏற்பாகும். நீங்கள் நேரடியான சேதங்களை மாத்திரமே மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் குறித்த ஏற்பாகின்ற VM சேவைக்காக நீங்கள் செலுத்தியுள்ள பணத்திற்கு மேலதிகமாக வேறு பணத்தினை மீளப் பெற்றுக் கொள்ள முடியாது. VM ஆனது மோசடி, கவனயீனம், வேண்டுமென்ற துர்நடத்தை, மரணம் அல்லது தனிப்பட்ட ஊறு என்பவற்றிற்கான தனது கடப்பாட்டினை மட்டுப்படுத்தவில்லை. சில நியாயாதிக்கங்கள் மேற்சொல்லப்பட்ட விலக்களிப்புக்கள் மற்றும் மட்டுப்பாடுகளை அனுமதிப்பதில்லை, ஆகவே, மேலுள்ளவற்றுள் சில அல்லது மேலுள்ளவை அனைத்தும் உங்களுக்கு ஏற்பாகாமல் போகலாம்.  

12.  பொதுவான நியதிகள்

  1. மொத்த ஒப்பந்தம்

 

இவ் ஒப்பந்தமும், சேவைகளில் உங்கள் பாவனையினை ஆளுகை செய்கின்ற நியதிகளும் இணைந்து, உங்களுக்கும் VM இற்கும் இடையிலான முழுமையான ஒப்பந்தத்தினை ஆக்குகின்றது. இவ் ஒப்பந்தமானது எழுத்தினால் எழுதப்பட்டு VM இனால் கையொப்பமிடப்பட்டாலொழிய மாற்றப்படுவதற்கோ செம்மைப்படுத்தப்படுவதற்கோ முடியாதது. இவ் ஒப்பந்தத்தின் கீழான உரிமையொன்றினை VM பிரயோகிக்கத் தவறுதலானது அவ் உரிமையினை அல்லது வேறு உரிமையினைத் துறந்ததாகாது. இவ் ஒப்பந்தத்தின் ஏதேனுமொரு பகுதி நடைமுறைப்படுத்தப்பட முடியாததாகுமாயின், இவ் ஒப்பந்தத்தின் ஏனைய அனைத்து பகுதிகளும் முழுமையான பலத்துடனும் வலுவுடனும் தொடர்ந்து நிலைத்திருக்கும். 

  1. ஆளுகை செய்கின்ற சட்டம் 

    இவ் ஒப்பந்தமானது தற்போது இலங்கையில் வலுவிலுள்ள சட்டங்களுக்கமைய ஆக்கப்பட்டிருப்பதுடன் அவற்றினால் ஆளுகை செய்யப்படுகின்றன. 

13.  இவ் ஒப்பந்தத்திற்கான மாற்றங்கள் 

VM ஆனது இவ் ஒப்பந்தத்தினை காலத்திற்கு காலம் செம்மைப்படுத்த முடியும், ஆகவே தயவுசெய்து அதனை அடிக்கடி மீளாய்வு செய்யவும். 

 

இவ் ஒப்பந்தத்தின் முந்தைய பதிப்பினை ஏற்றுக்கொண்டுள்ள VM பாவனையாளர்கள் தொடர்பில் இம்மாற்றங்கள் அவை ………………...என்ற இணைப்பில் பதிவிடப்பட்டு 30 நாட்களின் பின்னர் ஏற்பாகும். நீங்கள் VM சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றீர்கள் என்பது நீங்கள் அம்மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பதாகக் கருதப்படும். நீங்கள் இவ் ஒப்பந்தத்தின் பதிப்பொன்றினை ஏற்றுக் கொண்டுவிட்டால், நாம் எதிர்காலத்தில் செய்யக்கூடிய பாரிய மாற்றங்களை அவற்றிற்கான உங்களுடைய வெளிப்படையான சம்மதமின்றி நடைமுறைப்படுத்த மாட்டோம். நீங்கள் இவ் ஒப்பந்தத்திற்கான பிரதான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில், நீங்கள் அவ்வாறு செய்ய மறுத்தால், நீங்கள் வழங்கப்பட்ட VM சேவையினைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முடியாது போகும்.  

14.  முரண்பாட்டுத் தீர்வுகள்

இப்பிரிவு 14 ஆனது எங்களுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் தோன்றும்போது அதனைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட வழியினைக் குறிப்பிடுகின்றது. 

உங்களுடைய பல கரிசனைகளை நீங்கள் VM இன் வாடிக்கையாளர் உதவி மையத்தினுள் நுழைவதனூடாக விரைவாகவும் திருப்திகரமாகவும் தீர்த்துக்கொள்ள முடியும். 

இவ் ஒப்பந்தம் தொடர்பாகத் திறத்தவர்களிடையே தோன்றுகின்ற ஏதேனும் முரண்பாடொன்றினை, அம்முரண்பாடு தொடர்பாக ஒரு திறத்தவரால் மற்றைய திறத்தவருக்கு இணக்கத் தீர்மானத்திற்கான அறிவித்தல் வழங்கப்பட்டு முப்பது நாட்களுக்கு  பின்னரும் இணக்கத் தீர்மானத்திற்கு வர முடியவில்லையாயின், இருவருள் எவரேனுமொரு திறத்தவரால் வர்த்தக நடுத்தீர்ப்பிற்கு 

15.  நடுத்தீர்ப்பு

இப் பயனர் உரிம ஒப்பந்தம் தொடர்பாக அல்லது இதிலிருந்து ஏதேனும் முரண்பாடு அல்லது வேற்றுமை தோன்றுமாயின்  அது நடுத்தீர்ப்பினால் தீர்க்கப்படுதல் வேண்டும். நடுத்தீர்ப்பானது 1995 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க, நடுத்தீர்ப்புச் சட்டம் மற்றும் வர்த்தகச் சட்டம் மற்றும் நடைமுறை விருத்திக்கான நிறுவனத்தின் (ICLP (Institute for the Development of Commercial Law and Practice))) நடுத்தீர்ப்பு நிலையத்தின் விதிகளுக்கமைய இடம்பெறுதல் வேண்டும். நடுத்தீர்ப்பு இடம்பெறுமிடம் கொழும்பாயும், நடுத்தீர்ப்பிற்கான மொழி ஆங்கிலமாயும் இருத்தல் வேண்டும். 

 

நடுத்தீர்ப்பிற்கு ஒரேயொரு நடுத்தீர்ப்பாளரே காணப்படுதல் வேண்டுமென்பதுடன் நடுத்தீர்ப்பிற்காக ஆற்றுப்படுத்திய திறத்தவர் மூன்று பெயர்களை மற்றையத் திறத்தவரிடம் வழங்கி அவர்களுள் ஒருவரை நடுத்தீர்ப்பாளராகத் தெரிந்தெடுக்கும்படி கூற வேண்டும். அவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டு 28 நாட்களுக்குள் நடுத்தீர்ப்பாளர் ஒருவரின் நியமனம் தொடர்பாகத் திறத்தவர்கள் உடன்பாட்டிற்கு வரவில்லையாயின், அந்நியமனமானது ஐஊடுP இன் நடுத்தீர்ப்பு நிலையத்தின் விதிகளுக்கமைய ஐஊடுP இனால் மேற்கொள்ளப்படும். 

 

இப்பிரிவு 15 ஆனது உங்களுக்கும்VM இற்கும் இடையிலான உடன்பாடாகும் என்பதுடன் அது எங்களுடைய முகவர்கள், பணியாளர்கள், துணை நிறுவனங்கள், முன்னோடிகள், வழியுரித்தாளர்கள், பயனாளிகள் மற்றும் பொறுப்பொப்படைக்கப்பட்டவர்கள் அனைவர் தொடர்பிலும் ஏற்பாகும். 

நடுத்தீர்ப்பு ஒப்பந்தத்திற்கான மாற்றங்கள்

 

நடுத்தீர்ப்பிற்கான இவ் ஒப்பந்தம் தொடர்பில் நீங்கள் அத்தகைய மாற்றங்களுக்கு வெளிப்படையாக இணங்காதவரையில் VM ஆனது எத்தகைய பெரிய மாற்றங்களையும் நடைமுறைப்படுத்தாது. 
 

பயனர் உரிம ஒப்பந்தம்- மெய்நிகர் அருங்காட்சியகம் 

bottom of page